ஹிந்தியில் பேசு மச்சான்.. வருண் சக்கரவர்த்தியிடம் கேட்ட கேப்டன் சூர்யா.. சமூக வலைதளத்தில் வைரலான வருண் சக்கரவர்த்தியின் பதில்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்திய மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 61 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் போட்டியின்போது இந்திய கேப்டன் சூரியகுமார் யாதவ் பவுலர் வருண் சக்கரவர்த்தியிடம் ஹிந்தியில் பேசு என்று கூறியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

அதாவது எப்போதுமே இந்திய வீரர்கள் வெளிநாட்டு வீரர்களுக்கு புரிய கூடாது என்பதற்காக இந்தியில் பேசி திட்டங்களை அமைத்துக் கொள்வார்கள். ஆனால் பாகிஸ்தான் வீரர்களுக்கு தாய்மொழி உருது என்பதால் அவர்களுக்கு இந்தி மொழியும் நன்றாக தெரியும். இதனால் அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் வீரர்களிடம் நல்ல ஆங்கிலத்தில் தனது திட்டங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் நகைச்சுவைக்காக அணியின் கேப்டன் சூர்யா வருண் சக்கரவர்த்தியிடம் சென்று ‘ஹிந்தியில் பேசு மச்சான்’ என்று கூற அதற்கு பதில் கொடுத்த வருண் சக்கரவர்த்தி எனக்கு இந்தி தெரியாது என்று கூறி இருக்கிறார். ஆனால் இது கேப்டன் சூர்யா நகைச்சுவைக்காக மட்டுமே பேசினார் என்று தெரிகிறது. ஆனால் வருண் ஆங்கிலம் நன்றாக பேசுவாரே இதனால் அவரை ஆங்கில மொழியிலேயே பேசச் சொல்லி இருக்கலாமே என்று தமிழ் ரசிகர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles