தோனி ஒரு ரியல் ஜென்டில்மேன்.. காலில் விழுந்த ரசிகரிடம் தோனி கூறிய நம்பிக்கை வார்த்தை.. அவரே அளித்திருக்கும் பேட்டி

இந்த வருடம் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் 7 போட்டிகள் வெற்றியும், 7 போட்டிகள் தோல்வியும் தழுவி புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் முடித்து இருக்கிறது. மகேந்திர சிங் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் ஐபிஎல் தொடரில் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

- Advertisement -

அவர் வருடத்திற்கு ஒருமுறை ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும், அவருக்கு இருக்கிற ரசிகர் பட்டாளம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்கிறது. மைதானத்தில் தோனியை பார்த்த ரசிகர் ஒருவர் பகிர்ந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

கடந்த ஆண்டு சென்னை அணி ஐந்தாவது கோப்பையை வென்றதோடு தோனி தனது ஓய்வு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசன் விளையாடப் போகிறேன் என்று ஏற்கனவே அறிவித்திருந்தார். கடந்த சீசனில் ஏற்பட்ட காயம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தோனி அதன்பிறகு ஓய்வு பெற்று திரும்பவும் ஐபிஎல் தொடரில் களமிறங்கினார்.

- Advertisement -

ஆனால் இந்த ஆண்டு எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தசை நார் கிழிவு அவருக்கு தொந்தரவு கொடுத்தது. மேலும் இளம் கேப்டன் ருத்ராஜ் இருந்ததாலும், அவருக்கு சரியான ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலும் மேலும் அணியில் தோனியைத் தவிர வேறு யாரும் விக்கெட் கீப்பர் இல்லை என்ற காரணத்தினாலும் அவர் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடினார். ஒரு வேலை கான்வே இருந்திருந்தால் சில போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த நிலையில் குஜராத் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் மகேந்திர சிங் தோனியை நோக்கி வந்துஅவர் காலில் விழுந்தார். அப்போது தோணி அவரை எழுப்பி சில வார்த்தைகள் கூறி இருக்கிறார். மேலும் அப்போது அந்த ரசிகரை அழைத்துச் செல்ல வந்த மைதானம் ஊழியர்களிடமும் அவரை பத்திரமாக அழைத்துக் கொண்டு செல்லுமாறும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

அந்த வீடியோ அப்போது வைரலான நிலையில் அது குறித்து அந்த ரசிகரே தற்போது தோனி கூறியது குறித்து பேட்டி வைத்திருக்கிறார். அவர் கூறும் பொழுது
“நான் தோனியை பார்க்க வேண்டும் என்ற காரணத்தினால் நேராக மைதானத்திற்கு உள்ளே சென்று அவரது காலில் விழுந்தேன். அப்போது எனக்கு இருந்த மூச்சு திணறல் பிரச்சினையை பற்றி கூறி அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறினேன். அப்போது தோனி கவலைப்படாதே. உன்னுடைய சிகிச்சை நான் பார்த்துக் கொள்கிறேன். உனக்கு எதுவும் ஆகாது, நீ கவலைப்படாதே.

இதையும் படிங்க:மறந்த மாதிரி கூட அந்த தப்பை மறுபடியும் பண்ணிராதீங்க கோலி.. செமில ஏன் தோத்தோம்னு ஞாபகம் வச்சுக்கோங்க ரோகித்.. வேண்டுகோள் விடுக்கும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்

உனக்கு எதுவும் ஆவதற்கு விட மாட்டேன்” என்று கூறி இருக்கிறார். மகேந்திர சிங் தோனி கூறியதாக அந்த ரசிகர் கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களின் மிகவும் வைரலாக பரவி வருகிறது. தோனி ஏற்கனவே ரசிகர்கள் மீது அன்பு வைத்திருக்கிறார் என்று கூறப்படும் நிலையில் அவர், பேசிய இந்த கருத்து தற்போது ரசிகர்களிடையே அவரது மதிப்பை மேலும் உயர்த்தி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles