ஐபிஎல் 2024ல் அறிவிக்கப்பட்ட 12 விருதுகள்.. சுனில் நரேனுக்கு மட்டும் இரண்டு விருதுகள்.. மொத்த பரிசுத்தொகை குறித்த முழு விபரம்

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கொல்கத்தா அணி ஐபிஎல் பட்டத்தை மூன்றாவது முறையாக கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் மொத்தம் 12 விருதுகள் மற்றும் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன் முழு விபரம் குறித்து காணலாம்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் வளரும் வீரருக்கான எமர்ஜிங் பிளேயர் விருதை ஹைதராபாத் அணியின் நிதிஷ்குமார் வென்றார். அவர் இந்த தொடரில் 13 போட்டிகளில் 303 ரன்கள் எடுத்தது மட்டுமில்லாமல், மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அடுத்து அதிக ஸ்டிரைக் ரேட்டில் விளையாடிய எலக்ட்ரிக் ஸ்ட்ரைக்கர் விருதை ஆஸ்திரேலியாவை சேர்ந்த இளம் வீரரும் தற்போது டெல்லி அணிக்காக விளையாடிக் கொண்டிருக்கும் ஜேக் பிரேசர் மெக்கர்க் வென்றார்.

- Advertisement -

இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 234.4 ஆகும். இந்தப் பட்டியலில் இரண்டு விருதுகளை கொல்கத்தா அணியின் சுனில் நரேன் வென்றுள்ளார். அதில் அல்டிமேட் ஃபேண்டஸி பிளேயர் மற்றும் மோஸ்ட் வேல்யூபில் பிளேயர் என்ற இரு விருதுகளையும் அவர் தட்டிச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் 42 சிக்சர்கள் அடித்து சூப்பர் சிக்ஸர் விருதை அபிஷேக்சர்மாவும், 64 பவுண்டரிகள் அடித்து சூப்பர் போர்ஸ் விருதை ட்ராவிஸ் ஹெட்டும் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

கேட்ச் ஆஃப் தி சீசன் விருதை கொல்கத்தா அணியின் ரமன் தீப் சிங் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக கேட்ச் பிடித்ததன் மூலமாக இந்த விருதை வென்றிருக்கிறார். மேலும் களத்தில் ஒழுக்கத்துடன் விளையாடியதற்கான பேர் பிளே அவார்டு விருதை ஹைதராபாத் அணி வென்றது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்ததற்கான ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். 15 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 743 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹர்சல் பட்டேல் அதிக விக்கெட் வீழ்த்தியதற்கான ஊதா நிற தொப்பியை வென்றார்.

- Advertisement -

இவர் 14 போட்டிகளில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து விருதுகளுக்கும் பரிசுத்தொகையாக 10 லட்ச ரூபாயாக அறிவிக்கப்பட்டு வழங்கப்பட்டது. மற்றும் சில இன்ன பிற விருதுகளும் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறந்த ஆடுகளத்தை தயார் செய்ததற்கான விருதை ஹைதராபாத் ஆடுகள தயாரிப்பாளர் வென்றார்.

இதையும் படிங்க:நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த இதுவே காரணம்.. பேட்டிங்கில் அவர் இல்லாத குறையை இவர் நிரப்பி விட்டார்.. சுனில் நரேன் பேட்டி

இந்த விருதுக்கு மட்டும் பரிசுத் தொகையாக 50 லட்சம் ரூபாய் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த தொடரில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணிக்கு பரிசுத்தொகையாக 20 கோடியும், தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் அணிக்கு 12 1/2 கோடியும் வழங்கப்பட்டது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles