இப்படிப்பட்ட நாள் வரும்னு நல்லா தெரியும்.. கம்பீர் நடுவுல என்கிட்ட சொன்ன அதை அப்படியே செஞ்சேன் – சூரியகுமார் யாதவ் பேச்சு

இன்று டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் அமெரிக்க அணிக்கு எதிராக 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் இந்த போட்டியில் எல்லா இந்திய பேட்ஸ்மேன்களும் சொதப்ப, தனி ஒருவராக நின்று இந்திய அணியை வெற்றி பெற வைத்த கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் இந்த போட்டி குறித்து பேசும் போது ” இப்படி ஒரு நாள் வரும் என்று எனக்கு மிக நன்றாகவே தெரியும். நடுவில் சில போட்டிகளில் என்னுடைய இன்னிங்ஸை கட்டுப்படுத்தி விளையாடுவதற்கு நான் முயற்சி செய்தேன். ஆனால் அதை என்னால் செய்ய முடியவில்லை. அதற்கு மேல் என் பயிற்சியை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு ஒரு இரண்டு வார காலம் குடும்பத்தோடு இருந்துவிட்டு நாக்பூர் வந்தேன். அந்த போட்டியில் நான் சிறப்பாக திரும்பினேன்”

- Advertisement -

” 76 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை நாம் இழக்கும் பொழுது யாராவது ஒருவர் கடைசி வரையில் நின்று விளையாடுவது அவசியம் என்பது புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயத்தில் ஆட்டத்தில் 14வது ஓவர் இடைவேளையின் போது உள்ளே வந்த கம்பீர் பாய் என்னிடம் கடைசி வரை நின்று விளையாடும் படியும், தேவைப்படும்போது ரன் வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம் என்று சொன்னார்”

- Advertisement -

“இத்துடன் நான் மும்பையில் அதிகம் விளையாடி இருப்பதால் எனக்கு இங்குள்ள ஆடுகளங்கள் என்ன செய்யும்? என்று மிக நன்றாகவே தெரியும். எனவே யாருக்கு எவ்வளவு ஓவர்கள் மீதம் இருக்கிறது? என்று கணக்கிட்டு கொண்டே, கடைசிவரையில் நின்று விளையாட முடிவு செய்து, அதை செய்தேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles