ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரில் சுப்மன் கில் சொதப்பி வரும் நிலையில், இந்திய அணி ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், சுப்மன் கில்லுக்கு மட்டும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருவது விமர்சனங்களை பெற்று வருகிறது.
இதுகுறித்து அஸ்வின் பேசும் போது, நாம் அனைவரும் ருதுராஜ் கெய்க்வாட்டின் கிளாஸ் பற்றி பேச மறந்துவிடுகிறோம். ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கிரிக்கெட் புத்தகத்தில் உள்ள அத்தனை ஷாட்களும் உள்ளது. ஆனால் இதுவரை டி20 கிரிக்கெட் சீனிலேயே ருதுராஜ் கெய்க்வாட் சேர்க்கப்படாதது ஏன் என்பதே தெரியவில்லை. கடைசியாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி இருக்கிறார்.
அப்போதைய கேப்டன், பயிற்சியாளர்கள் அனைவரும் வேறு ஆட்கள். அதன்பின் ருதுராஜ் கெய்க்வாட் வாய்ப்பே பெறவில்லை. அந்த தொடரிலும் ஒரு சதம், 2 அரைசதங்கள் அடித்துள்ளார். இவர்களை போன்ற வீரர்களுக்கு சரியாக தகவல் பரிமாறப்பட வேண்டும். அப்படியில்லை என்றால், ஒரு மாதிரி இருட்டுக்குள் சென்றுவிடுவார்கள். ரெட் பால் கிரிக்கெட்டிலும் அசத்துகிறார். மிடில் ஆர்டரில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளார்.

