ஒருநாள் கூட ஓய்வு கிடையாது.. துபாயில் இருந்து நேராக அகமதாபாத் வந்த பயிற்சியளர் கம்பீர்.. அசந்துபோன ரசிகர்கள்

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் வென்றதன் மூலமாக இந்திய அணி 12ஆவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவரிடம் இருந்து ஆசியக் கோப்பையை இந்திய அணி பெறவில்லை.

- Advertisement -

அகமதாபாத் வந்த கம்பீர்

கோப்பை இல்லாமலேயே இந்திய அணி வீரர்கள் சாம்பியன் பட்டத்துடன் கொண்டாடினார்கள். அது இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி வீரர்கள் இன்று காலை ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார்கள். அவர்களுக்கு பலரும் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ஸ்பின்னர் குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் நேராக அகமதாபாத் வந்து இறங்கினர். இவர்கள் மும்பை அல்லது டெல்லியில் இறங்காமல் அகமதாபாத் இறங்க என்ன காரணம் என்ற குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. 

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் போட்டியில் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடக்க உள்ளது. ஏற்கனவே 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய அணியின் சீனியர் வீரர்களான கேஎல் ராகுல், முகமது சிராஜ் உள்ளிட்டோர் அகமதாபாத் சென்றுவிட்டனர். அவர்களுடன் கம்பீர் மற்றும் சக இந்திய வீரர்களும் இன்று இணைந்தனர். 

ஆசியக் கோப்பைக்கும், வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கும் இடையில் 2 நாட்கள் கூட இந்திய அணி வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் முழுமையாக ஓய்வு கிடைக்கவில்லை. ஆனால் கொஞ்சம் கூட அசராமல் இந்திய அணி நிர்வாகிகள் அடுத்த சவாலுக்கு தயாராகிவிட்டனர். இதனால் கம்பீருக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles