பும்ரா விளையாடினால் இந்திய அணி தோற்கும்.. இதுதான் பொறாமையா.. வாயைக் கொடுத்த இங்கிலாந்து ஜாம்பவான்.. பதிலடி கொடுத்த இந்தியா!

உலகம் முழுக்கவே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ஜஸ்பிரிட் பும்ராவின் பவுலிங் மீது பல்வேறு கிரிக்கெட் வாரியங்கள் பொறாமை கொள்ள தொடங்கிவிட்டன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிடம் பும்ரா போல் பவுலிங்கில் சாதனை படைக்க ஒரு ஆள் இல்லையே என்று முன்னாள் வீரர்கள் பலரும் தங்களின் பேச்சுகள் பேசத் தொடங்கிவிட்டார்கள்.

- Advertisement -

டேவிட் லாய்ட் கருத்து

அதன் ஒரு பகுதியாக, ஜஸ்பிரிட் பும்ரா விளையாடிய போட்டிகளில் இந்திய அணி தோல்வியடையும் என்று ஒரு சில ஸ்டாட்ஸ்களை வைத்து பேச தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாய்ட், பும்ரா விளையாடாத போட்டிகளில் தான் இந்திய அணி அதிகமாக வென்றுள்ளது என்று கூறி இருக்கிறார். இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது. 

- Advertisement -

இதுதொடர்பாக டேவிட் லாய்ட், பும்ரா இல்லாமல் இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியது மிகச்சிறந்த விஷயம். பும்ரா விளையாடும் போது இந்திய அணி அதிகமாக தோற்கிறது. ஆனால் பும்ரா விளையாடாத போது வெல்கிறார்கள். ஆனால் உலகின் தலைசிறந்த பும்ரா என்பதில் மாற்று கருத்து இல்லை. கொஞ்சம் வித்தியாசமான பவுலிங் ஆக்‌ஷனுடன் பும்ரா பவுலிங் செய்கிறார். 

- Advertisement -

பும்ரா விளையாடுவாரா?

ஆனால் பும்ரா மிகவும் சிறந்த மனிதராக களத்தில் காணப்படுகிறார். அதேபோல் இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீர், 5 டெஸ்ட் போட்டியில் 3 போட்டிகளில் மட்டுமே பும்ரா விளையாடுவார் என்று கூறி இருந்தார். அதனால் இந்த போட்டியில் அல்லாமல், பும்ராவுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் அடுத்த போட்டியில் விளையாடி இந்திய அணி வென்றால், 2-2 என்ற நிலை வந்துவிடும். 

அதன்பின் ஓவல் மைதானத்தில் கடைசி போட்டியில் என்ன நடக்கும் என்பதை பார்க்க முடியும். அதனால் பும்ரா அடுத்த போட்டியில் ஆடுவார் என்றே நினைக்கிறேன். ஒருவேளை 4வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்றால், கடைசி போட்டியில் பும்ரா விளையாட மாட்டார். அதேபோல் 3 மற்றும் 4 ஆகிய டெஸ்ட் போட்டிக்கு இடையில் சிறந்த இடைவெளி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். டேவிட் லாய்டின் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles