இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. 193 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, தோல்வியை தவிர்க்க கடுமையாக போராடியது. சிறப்பாக ஆடிய ஜடேஜா கடைசி வரை 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
சுப்மன் கில் பேட்டி
இந்த தோல்விக்கு பின் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பேசும் போது, எங்கள் வீரர்களின் போராட்டம் குறித்து பெருமை கொள்கிறேன். 5 நாட்களும் கடுமையாக போராடி, ஆட்டம் கடைசி செஷன் வரை வந்து நின்றிருக்கிறது. அதிலும் கடைசி விக்கெட்டின் போது போராடியது மகிழ்ச்சி அளிக்கிறது. சேஸிங்கில் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். ஏனென்றால் ஏராளமான பேட்ஸ்மேன்கள் வரிசையில் இருந்தனர்.
ஆனாலும் இங்கிலாந்து அணி தொடர்ச்சியாக அட்டாக் செய்து கொண்டே இருந்தது. டாப் ஆர்டரில் இருந்து ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஆனால் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணி எங்களை விடவும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியது. ஒரு பேட்ஸ்மேன் களத்தில் இருக்கும் போது, எப்போதும் நம்பிக்கையுடன் இருப்போம். இலக்கு சிறியது என்பதால், ஒரு 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தாலே வென்றிருக்க முடியும்.
முதல் இன்னிங்ஸ் தவறு
ஜடேஜா மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர். அவருக்கு எந்த மெசேஜும் கொடுக்க தேவையில்லை. டெய்லண்டர்களுடன் மிகச்சிறப்பாக ஆடி வந்தார். நாங்கள் முதல் இன்னிங்சில் 80 முதல் 100 ரன்கள் முன்னிலை பெற்றிருக்க வேண்டும். ஏனென்றால் 5வது நாள் ஆட்டத்தில் 150 ரன்களை சேஸ் செய்வது எளிதல்ல என்பதை அறிந்தோம். 80 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தால், வென்றிருப்போம். இன்று காலை கூட சரியான திட்டத்துடன் களமிறங்கினோம்.
ஒரு வேளை 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கப்பட்டிருந்தால், முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். எப்போதும் ஸ்கோர்போர்டை மட்டும் பார்த்தால் எதுவும் தெரியாது. நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை விளையாடினோம். அடுத்த போட்டியில் பும்ரா விளையாடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

