இஷான் கிஷான் ஸ்டம்பிங்கால் வந்த நோ-பால்.. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம்.. என்ன நடந்தது?

இந்தியா -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் தோல்விக்கு,மோசமான பந்து வீச்சு செயல்பாடும் இஷான் கிஷானின் தவறுதலான ஸ்டம்பிங்கும் முக்கியக்காரணியாகப் பார்க்கப்படுகிறது.

- Advertisement -

உலகக் கோப்பைக்குப் பிறகு சீனியர் வீர்களுக்கு ஒய்வளித்துவிட்டு, இளம் வீரர்களைக்கொண்ட இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரை எதிர் கொண்டது. இந்த அணிக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லட்சுமண் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார்

- Advertisement -

தனது முதல் இரு போட்டிகளை வென்ற இந்திய அணி, மூன்றாவது போட்டியை கவுகாத்தியில் உள்ள பரஸ்பரா ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் செய்த இந்தியா ஆரம்பத்தில் 2 விக்கெட்டுகளை இழந்து சற்று தடுமாறினாலும், பின்னர் சேர்ந்த ருதுராஜ் -சூர்ய குமார் – திலக்வர்மா ஜோடி அணியை 222-3 நல்ல ஸ்கோர் எட்ட உதவியது.

- Advertisement -

பின்னர் கடின இலக்கை எதிர்கொண்ட ஆஸ்திரேலியா அணி ஒருபுறம் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுமுனையில் மேக்ஸ்வெல் ஆரம்பம் முதலே தனது அதிரடியை தொடர்ந்தார். அவரின் இந்த அதிரடி உலகக் கோப்பையில் ஆப்கான் அணிக்கு எதிராக அவர் ஆடிய ருத்ரதாண்டாவத்தை மீண்டும் ஞாபகப்படுத்தியது. அவருக்கு பலமாக கேப்டன் மேத்யூ வேட் அவருடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அவரும் தனது அதிரடியை தொடர்ந்தார்

ஆட்டத்தின் முக்கியமான இறுதிக்கட்டத்தில் 18வது ஓவரை அக்சர் படேல் வீசினார். அவர் வீசிய 18.4வது பந்தை மேத்யூ வேடுக்கு வைடாக சென்றது. கிரீசை விட்டு வெளியே வந்த வேட் அதைத்தவற விட, விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ஸ்டம்ப்களுக்கு முன்னே கையை நீட்டி பந்தை பிடித்து அவுட் செய்தார்.

- Advertisement -

ஆனால் கிரிக்கெட் விதிப்படி பேட்ஸ்மேன் பேட் செய்து கொண்டிருக்கும் போது, பின்னால் இருக்கும் விக்கெட் கீப்பர் தனது கைகளையோ அல்லது கால்களையோ ஸ்டம்ப்களுக்கு முன் நகர்த்தி கீப்பிங் செய்யக்கூடாது.

பந்து ஸ்டம்ப்களுக்கு பின்னால் வரும்பொழுது மட்டுமே பிடிக்க வேண்டும். இஷான்கிஷன் செய்த தவறும் அதுதான். இதன் காரணமாக அந்தப் பந்து நோ-பால் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு அடுத்து போடப்பட்ட பந்தை மேத்யூ வேட் சிக்சர் அடிக்க ஆட்டம் முற்றிலும் ஆஸ்திரேலியாவின் வசம் சென்றது. இஷான் கிஷான் தொடர்ச்சியாகச் சர்வேதச போட்டிகளில் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொள்ளாததும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

இதானல் அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டு ஒரு விக்கெட்டை வீணடித்ததும் இல்லாமல் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை உறுதி செய்தது. இறுதியில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை இழக்காமல் நீடிக்கிறது. மேக்ஸ்வேல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles