இந்திய அணிக்கு திரும்பும் லார்ட் தாக்கூர்.. நிதீஷ் குமார் ரெட்டியை நம்ப முடியாது.. கம்பீர் முடிவு

ஐபிஎல் தொடருக்கு பின் இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இதற்கான இந்திய அணி விரைவில் தேர்வு செய்யப்பட உள்ளது. ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அடுத்த கேப்டனாக சுப்மன் கில் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார்.

- Advertisement -

அதேபோல் துணைக் கேப்டனாக ரிஷப் பண்ட் நியமனம் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பின்னர் மே 23ம் தேதி இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டு, புதிய கேப்டன் ரசிகர்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.

- Advertisement -

மீண்டும் ஷர்துல் தாக்கூர்

கடைசியாக தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் இந்திய அணிக்காக ஷர்துல் தாக்கூர் விளையாடி இருந்தார். அதன்பின் காயம் காரணமாக ஷர்துல் தாக்கூர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார். ஆனாலும் ரஞ்சி டிராபி தொடரில் மும்பை அணிக்காக பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அபார ஃபார்மை வெளிப்படுத்தி இருந்தார்.

- Advertisement -

அதிலும் தமிழ்நாட்டிற்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் ஷர்துல் தாக்கூர் சதம் விளாசி மும்பை வெற்றிக்கு காரணமாக அமைந்தார். தற்போது ஐபிஎல் தொடரில் மெகா ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை என்றாலும், லக்னோ அணிக்காக மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்த சீசனில் ஷர்துல் தாக்கூர் மிகச்சிறப்பாக செயல்பட்டு அசத்தினார்.

நிதீஷ் ரெட்டிக்கு மாற்று

அதேபோல் இங்கிலாந்து மண்ணில் ஷர்துல் தாக்கூர் மிகச்சிறந்த ரெக்கார்டை வைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஆடிய போட்டிகள் அனைத்திலும் ஷர்துல் தாக்கூர் அரைசதம் விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் ஷர்துல் தாக்கூர் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக நிதீஷ் குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தார்.

- Advertisement -

5 போட்டிகளிலும் விளையாடிய நிதீஷ் குமார் ரெட்டி, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் ஐபிஎல் தொடரில் காயத்திற்கு பின் அவர் பெரிய ஃபார்மில் இல்லை. இதுவரை வெறும் 174 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளதோடு, பவுலிங் செய்ய அழைக்கப்படவே இல்லை. இதனால் நிதீஷ் குமார் ரெட்டிக்கு மாற்று வீரராக ஷர்துல் தாக்கூர் சேர்க்க முடிவு எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles