ஸ்ஸப்பாடா தப்பிச்சேன்டா சாமி – பெருமூச்சு விடும் வங்காளதேச ஆல் ரவுண்டர்

ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியல் முதல் இடத்தில் இருந்த வங்கதேசத்தை சார்ந்த இடக்கை சுழற் பந்துவீச்சாளர் ஷாகிப் அல் ஹசன் இங்கிலாந்தில் நடைபெறும் மிகவும் பழமையான கவுண்டி தொடரில் சர்வே அணிக்காக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.கடந்த செப்டம்பர் மாதம் 2024 இல் சோமர்செட்டுக்கு எதிரான சர்ரே அணிக்கு விளையாடிய கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டியின் போது பந்துவீச்சு முறையில் சந்தேகம் ஏற்பட,ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர், தி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அவரை இடைநீக்கம் செய்தது. இதனை தொடர்ந்து ஐசிசியும் இவரை பந்து வீச அனுபவிக்கவில்லை.

- Advertisement -

இவரது பந்துவீச்சு நடவடிக்கை சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்டதத்தொடர்ந்து, வங்களாதேஷின் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தேர்வாளர்கள் இவரை ஒரு சிறப்பு பேட்டராக தேர்வு செய்ய விரும்பாததால், அணியில் தேர்வு செய்ய படவில்லை. இதனால் வங்காளதேச அணிக்காக ஐசிசி கோப்பையை வென்று கொடுப்போம் என்ற கனவு, இவருக்கு கனவாகவே போய்விட்டது.

- Advertisement -

தன்னுடைய பந்துவீச்சின் மீது வழங்கப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவிக்க பல மாதங்களாக தொடர்ந்து போராடி வந்தார்.இது தொடர்பான பிரச்னையில் சிக்கி பந்து வீச்சு முறையை சரி செய்ய நடைபெற்ற சோதனையில் இருமுறை தோல்வி அடைய கடைசி வாய்ப்பை எதிர்நோக்கினார்.

- Advertisement -

சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற சோதனையில் தேர்ச்சி பெற்றார். இதன் மூலம் வரும் போட்டிகளில் இவரால் பந்து வீச முடியும். மேற்கொண்டு சர்வதேச போட்டியில் விளையாட நினைத்தால் அதற்கான போட்டியில் பங்கேற்று தன்னுடைய திறமையை நிரூபித்து மீண்டும் வங்காளதேச அணியில் தனக்கான இடத்தை உறுதி செய்யலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles