171 ரன்… இந்தியா ஜெயிக்க வேண்டிய மேட்ச்.. சொதப்பிய ஹர்திக் பாண்டியா.. இங்கிலாந்து அணி வெற்றி.. 3வது டி20

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5 T20 போட்டிகள் கொண்ட T20 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது.

- Advertisement -

இத்தொடரில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று 3வது போட்டியை வெற்றி பெற்றால் தொடரை வெல்லும் முனைப்பில் காத்திருந்து அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

- Advertisement -

இந்தியா பந்துவீச்சு

டாஸ் வென்ற இந்தியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர்களில் ஒருவரான பென் டகெட் நிதானமாக ஆட மறுமுனையில் விக்கெட்டுகள் சரிய தொடங்கின. சால்ட் (5), பட்லர் (24), புரூக் (8) விரைவில் சரிய மறுமுனையில் டகெட் (51), லிவிங்ஸ்டன் (47) ரன் சேர்த்தார்கள்.

- Advertisement -

115 – 4 என்று இருந்த நிலையில் வருண் சக்ரவர்தியின் சுழல் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பின் வந்த பேட்ஸ்மென்கள் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திருப்ப ஆட்டத்தின் முடிவில் 171-9 ரன்கள் குவித்தது. சிறப்பாக பந்த்வீசிய வருண் 24 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இந்தியா அணியின் பேட்டிங்

172 ரன்கள் எடுத்தால் தொடரை கைப்பற்றலாம் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் வகையில் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யா குமார் யாதவ் விரைவாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

இவரை தொடர்ந்து அபிஷேக் சர்மாவும் வெளியேற 48 – 3 என்ற கணக்கில் இந்திய அணி மிகவும் திணறியது. இதன் பிறகு திலக் வர்மா ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்த்து சரிவில் இருந்து மீட்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் திலக் வர்மா 17 ரங்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் மற்றும் அகசர் படேல் முறையே 6 மற்றும் 15 ரன்கள் எடுத்து வெளியேற மறுமுனையில் பாண்டியா பொறுப்பாக விளையாடி 40 ரன்கள் சேர்த்தார்.18வது ஓவர் முடிவில் 131 ரன்கள் 6 விக்கெட் என கடைசி இரண்டு ஒவர்களில் 41 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது.

ஹர்திக் பாண்டியா மீதே அனைவரின் நம்பிக்கை இருந்த நேரத்தில் 19வது ஓவரின் முதல் பந்திலேயே ஓவர்டன் பந்தில் வெளியேற இந்திய அணியின் வெற்றி கனவு தகர்ந்தது. இதை தொடர்ந்து 20 ஓவர்கள் முடிவில் 145 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர் 2-1 என கணக்கில் உள்ளது.

நான்காவது போட்டி வரும் வெள்ளி (31 ஜனவரி) அன்று புனேவில் நடக்கவுள்ளது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி தொடரை சமன் செய்யுமா அல்லது இந்தியா அணி கோப்பை வெல்லுமா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles