புரூக் புகை குற்றச்சாட்டு.. சென்னையில் மீண்டும் வருண் பந்தில் அவுட்.. அஷ்வின் தரமான பதிலடி

இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட T20 தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இவற்றில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றன.

- Advertisement -

கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் 132 ரன்கள் எடுத்த இங்கிலாந்து அணி சென்னையில் நடந்த இரண்டாவது போட்டியில் 165 ரன்கள் குவித்தது. முதல் போட்டியில் இங்கிலாந்து தோல்வி அடைந்த பிறகு ஹேரி புரூக் பனிமூட்டம் அதிமாக இருந்தவையால் சரியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என காரணம் கூறியிருந்தார்.

- Advertisement -

அந்த கருத்திற்கு அஷ்வின் தனது பதிலடியை குடுத்துள்ளார். புரூக் இரண்டு முறையும் தனது விக்கெட்டை வருண் சக்கரவர்த்தியிடம் இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அஷ்வின் பதிலடி

புரூக் சொன்ன காரணதிற்கு அஷ்வின் கூறியதாவது “சென்னையில் புகை மூட்டம் இல்லை. கொல்கத்தாவில் புகை மூட்டம் நிலவுவதால் வருண் சக்ரவர்த்தியை எதிர்கொள்வது கடினம் என்று ஹாரி புரூக் கூறியிருந்தார். ஹாரி ப்ரூக்கிடம் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், வருண் சக்ரவர்த்தி லெக் ஸ்பின் பந்து வீச மாட்டார் என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். இது ‘கூக்லி’ என்று அஸ்வின் தனது யூடியூப் சேனலில் தெரிவித்துள்ளார்.

மேலும் வருண் பதுவீச்சை சரியாக புரூக்கினால் கணிக்க முடியவில்லை எனவும் அதற்கு பணிமூட்டத்தை காரணம் சொல்வதை ஏற்க முடியாது எனவும் அஷ்வின் தெரிவித்தார்.

- Advertisement -

“நீங்கள் லெக் ஸ்டம்பு திசையில் நகர்ந்தீர்கள், பந்து வீச்சைப் சரியாக கணிக்க முடியவில்லை, அதனால் நீங்கள் வெளியேறினீர்கள். பிறகு நீங்கள் ஸ்டம்பை மறைத்து முன் வந்து அடிக்க முயன்று மீண்டும் வெளியேறினீர்கள், ஆனாலும் கூக்லியைப் கணிக்க முடியவில்லை.

வெளிச்சம் எப்படி இருந்தாலும் நீங்கள் அவரது கையிலிருந்து வரும் கூக்லியைப் கணிக்க முடியவில்லை என்றால் நீங்கள் அவரது கையிலிருந்து கணிக்க முடியவில்லை என்றே பொருள்” என அஷ்வின் கூறினார்.

தொடரில் இந்தியா 2-0 என முன்னிலை

நடந்து வரும் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியது வருண் சக்கிரவர்த்தி. 2 போட்டிகளில் விளையாடி 5 விக்கெட்டுகள் வீழ்த்திய இவர் முதல் போட்டியில் 3 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் ஆனார்.

அடுத்த போட்டி இன்று (28 ஜனவரி) நடக்க உள்ள நிலையில் நடந்து வரும் வார்த்தை போர்களின் மூலம் போட்டியில் அதிக எதிர்ப்பார்ப்பு இருக்கும் என கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles