அஸ்வின் பெற்ற பத்மபூஷன் விருது குறித்து தவறான தகவலை பரப்பிய பத்ரிநாத்திற்கு பாடமெடுடுத்த WV ராமன்.
சமீபத்தில் இந்திய அரசால் பல்வேறு கலை விளையாட்டு அறிவியல் என பல துறைகளில் இருந்தும் பத்ம பூஷன் விருதுகள் அறிவிக்கப்பட்டது.
குறிப்பாக தமிழகத்தில் இருந்து நடிகர் அஜித் குமார் மற்றும் விளையாட்டு வீரர் அஷ்வின் ஆகிய இருவர் தேர்வுகள் பலர் இடையே சென்று சேர்ந்தது. இதை தொடர்ந்து பலரும் வாழ்ந்து தெரிவித்து வந்தனர்.
பத்ரிநாத் செய்த செயல்
இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையாடி அணிக்கு பெருமை சேர்த்துள்ளார் அஷ்வின். இந்திய அணியின் வரலாற்றில் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவர் அஷ்வின் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் 106 போட்டிகளில் விளையாடிய இவர் 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், கும்ப்ளேவுக்கு பிறகு அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய சுழற்பத்து வீச்சாளர் என்ற பெருமை பெற்றார் அஷ்வின்.
இந்தியாவில் இதுவரை 139 நபர்கள் மட்டுமே வாங்கி இருக்கும் இந்த பத்ம பூஷன் விருதுக்கு சொந்த்காரார் ஆனார் அஷ்வின். இதை தொடர்ந்து இவருக்கு நாட்டின் பல பகுதிகளில் இருந்து ஆதரவுகள் மற்றும் பாராட்டு குவிந்து வந்தன.
இந்நிலையில் தான் பத்ரிநாத்திடம் இருந்து வாழ்த்து வந்தன. அவற்றில், “தமிழகத்தில் இருந்து முதல் கிரிக்கெட் வீரர் பத்ம பூஷன் விருது பெறுகிறார், இதை விட இளைஞர்களுக்கு வேறு ஊக்க சக்தி இருக்க முடியாது, அஷ்வின் இந்த விருதை பெற மிகவும் தகுதியானவர்” என தனது X பக்கத்தில் பதிவிட்டார்.
WV ராமன் பதில்
இதை தொடர்ந்து பத்ரிநாத் பதிவிற்கு பதில் அளித்த WV ராமன் “முதன் முதலாக தமிழகத்தில் இருந்து வெங்கட்ராமன் தான் 2003 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது பெற்றார்” என பதில் குடுத்தார்.
இதை தொடர்ந்து தனது தவறி உணர்ந்த பத்ரிநாத் “அறியாமைக்கு நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன், இதை சொன்னதுக்கு மிகவும் நன்றி” என WV ராமனுக்கு பதில் குடுத்தார்.
உடனடியாக WV கூறியதாவது “இல்லை இல்லை இது உன்னோட அறியாமையாக இருக்காது நான் கூறியது போல 2003 ஆம் ஆண்டு வெங்கி விருந்து வாங்கிய பொழுது நீ சிறுவனாக இருந்திருப்பாய் ஆகவே அதை சொல்லாமல் இருக்கலாம்” என்றார்.

