ஒரு வார்த்தை சொன்னதுக்கு ரிஷப் பண்ட் குழந்தை மாதிரி கோச்சிகிட்டு வெளிய போயிட்டாரு – பண்ட் டெல்லி அணியை விட்டு வெளியேறியதன் காரணத்தை வெளியிட்ட நிர்வாகம் !

2025 ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரின் மெகா ஏலம் இரண்டு நாட்கள் மிகவும் பரபரப்பாக நடந்து முடிந்தது. வரலாற்றில் முதல் முறையாக 25+ கோடிகளுக்கு மேல் வீரர்கள் விலை போயுள்ளனர். டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் கடும் போட்டியில் ஈடுபட்டு இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஷ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிகளுக்கு வாங்கியது. ஐ.பி.எல் ஏலத்தில் அதிகபட்ச விலைக்குப் போன வீரராக முன்னேறினார்.

- Advertisement -

இந்த சாதனை நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அடுத்த பத்து நிமிடத்திலேயே தகர்தபட்டது. லக்னோ அணி ரிஷப் பண்ட்டை 27 கோடிகளுக்கு வாங்கி புதிய சாதனையைப் படைத்தது. முதலில் 20 கோடிகளுக்கு பண்ட்டை லக்னோ வாங்கியது. டெல்லி அணி விலையை ஏற்றுவதற்காக ஆர்.டி.எம் கேட்க, அதனைப் புரிந்துக் கொள்ளமால் ஒரே அடியாக 27 கோடிகள் விலையை ஏற்றி லக்னோ சூப்பர்ஜயன்ட்ஸ் வாங்கியது.

- Advertisement -

டெல்லி அணியின் இரண்டு நிர்வாகத்தில் ஒரு நிர்வாகத்தின் தலைவருக்கு பண்ட்டின் இருப்பு பிடிக்காததால் அவரை விடுவித்ததாக ஏலத்திற்கு முன்பு செய்திகள் வந்தன. ஆனால் அது வெறும் வதந்தி என மறுத்து உண்மையானக் காரணத்தை வெளியிட்டுள்ளார் டெல்லி அணியின் இணை உரிமையாளர் பார்த் ஜிண்டால்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” பண்ட் அணியை விட்டு வெளியே சென்றதற்கு காரணம் எந்த ஒரு நிர்வாகமும் அல்ல. கடந்த 2/3 சீசன்களாக அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் அது எதுவும் பூர்த்தி ஆகாததால் அவரிடம் நேரடியாக எங்களது ஏமாற்றத்தை பதிவிட்டோம். இந்தக் கருத்தை பண்ட் எளிதாக எடுத்துக் கொள்ளாமல் எமோஷனலாகி அணியை விட்டு வெளியேற முடிவெடுத்தார். “

” அவர் டெல்லியில் வளர்ந்த வீரர். அவரை விடுவதற்கு சுத்தமாக மனசே இல்லை. இந்த அணியின் இரண்டு உரிமையாளர்களும் பண்ட்டை சமாதானம் செய்ய எவ்வளவோ முயற்சி செய்தோம். ஆனால் அவர் விடாப்பிடியாக இருந்தார். அதனால் அவருக்கு ஆர்.டி.எம் கார்டு கூட பயன்படுத்த மாட்டோம் என அவரிடமே தெரிவித்தோம். அதனைத் தாண்டி மனசு கேட்காமல் ஏலத்தில் அவருக்கு பயன்படுத்திவிட்டோம். ஆனால் லக்னோ அணி ஒரே அடியாக 27 கோடிகள் ஏற்றி அவர்களது அணிக்கு சொந்தமாக்கினர். “

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles