நியூசிலாந்து மற்றும் இந்தியாவிற்கு எதிரான மூன்றாம் மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் நாளின் கடைசி சில நிமிடங்களில் பேட்டிங் செய்த கோலி, ரச்சின் ரவீந்திரா வீசிய பந்தில் வேகமாக சிங்கிளைப் பிடிக்க முயன்றபோது மாட் ஹென்றியிடம் தனது விக்கெட்டை கொடுத்து ஆட்டமிழந்தார். இதனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட் கோலி விக்கெட்டை வீணடித்ததற்காக சரமாரியாக விமர்சித்தார்.
இரு அணிகளின் நிலை என்ன?
மூன்றாம் மற்றும் கடைசி டெஸ்ட் தொடரின், நாள் ஒன்றுக்கான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது . இந்தத் தொடரில் அதிகபட்சமாக டேரல் மிட்சல் 82 ரன்களும், வில் யங் 71 ரன்களுமே சேர்த்திருந்தன.
இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் ஆட களமாடியது. இதில் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கினர். ரோகித் சர்மா 18 ரன்கள் எடுத்த நிலையில் அதிரடியாக ஆட முயன்ற போது மாட் ஹென்றியிடம் விக்கெட்டை பறிகொடுத்து அவுட் ஆனார். ரோகித் சர்மாவுக்கு பின் வந்த சுப்மன் கில் களத்தில் சிறிது நேரம் ஜெய்ஸ்வாலுடன் தாக்குபிடிக்கவே, ஜெய்ஸ்வாலும் 30 ரன்னில் அஜாஸ் பட்டேலிடம் அவுட் ஆனார். இன்றைய ஆட்ட நேரம் முடிவு பெற 5 ஓவர்கள் மட்டுமே மீதமிருந்த நிலையில், நேரத்தை வீணடிக்க பவுலர் சிராஜ் பேட்டிங் ஆட வந்தார். ஆனால், அவரும் தன்னுடைய விக்கெட்டை அஜாஸ் பட்டேலிடம் பறி கொடுத்தார். அவரது விக்கெட்டுக்குப் பின் வந்த விராட் கோலி, 4 ரன்கள் எடுத்த நிலையில், ரச்சின் ரவீந்திரா வீசிய பந்தை வேகமாக விரட்டி வெறும் ஒரு ரன்னை பிடிக்க முயன்றபோது மாட் ஹென்றியிடம் தனது விக்கெட்டை கொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் நாள் ஆட்டம் முடிவில், சுப்மன் கில் 31 ரன்னும், ரிஷப் பண்ட் 1 ரன்னும் எடுத்து களத்தில் இருக்க, இந்திய அணி 86/4 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை விட 149 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
மோசமான முடிவு என கண்டனம்:
இதனை முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது,“அவர் தன்னுடைய மனதில் என்ன எண்ணிக் கொண்டிருந்தாரோ?. இப்பொழுது அவர் ஒரு விக்கெட்டை வீணடித்துள்ளார்” என்று வர்ணனை செய்யும் பொழுது விமர்சித்தார்.

