நாம் 297 ரன்கள் அடிக்கவில்லை.. இது வெறும் 170 ரன்கள் கணக்கு தான்.. மனசுல வெச்சிகோங்க.. கேப்டன் சூரியகுமாரின் பிளான் இதுதான் – ரவி பிஷ்னாய் பேச்சு !

வங்கதேச அணிக்கு எதிரான டி20ஐ தொடரை பயங்கரமான ஆதிக்கத்தைச் செலுத்தி வென்றது சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி. கடைசி டி20ஐ போட்டியான நேற்று 297 ரன்கள் சேர்த்து பெரிய சாதனையைப் படைத்தது. ஆனாலும் வெறும் 170 ரன்கள் கணக்கு தான் அடித்தோம் என சூரியகுமார் யாதவ் வீரர்களிடம் கூறியதாக ரவி பிஷனாய் சொல்லியுள்ளார்.

- Advertisement -

ஹைதராபாத் மைதானத்தில் நேற்று நடந்த மூன்றாவது டி20ஐ போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. சாம்சன் – சூரியகுமார் யாதவ் ஜோடி பட்டையைக் கிளப்பி அணியை டாப் கியரில் கொண்டு சென்றனர். 14 ஓவரிலேயே 200 ரன்களை இந்திய அணி எட்டியது. சாம்சன் அதிரடி சதம் விளாசி 111 ரன்கள் மற்றும் சூரியகுமார் யாதவ் 75 ரன்கள் எடுத்துவிட்டு பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

இந்தத் தொடரின் ஃபினிஷர்களாக திகழ்ந்த பராக் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் அவர்களது பங்குக்கு பிரித்து மேய்ந்தனர். பராக் 34, பாண்டியா 47 அடிக்க கடைசி பந்தில் ரிங்கு சிங் சிக்ஸருடன் இந்திய அணியை 297 எனும் சாதனைப் படைத்த ஸ்கோருக்கு அழைத்துச் சென்றனர். முதல் பாதியிலேயே இந்திய அணி வெல்லப் போவது உறுதியானது, ஆனாலும் கேப்டன் சூரியகுமார் யாதவ் அணி வீரர்களுக்கு புதிய சவாலைக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து ஸ்பின்னர் ரவி பிஷ்னாய் கூறியதாவது, ” நாங்கள் இரண்டாவது இன்னிங்ஸில் பந்துவீச துவங்கும் முன் கேப்டன் சூரியகுமார் யாதவ் எங்களிடம், நாம் இப்போது 297 ரன்களை டிஃபன்ட் செய்யவில்லை 170 ரன்களை மனதில் வைத்து பந்துவீசுங்கள் என்றார். பிட்ச் பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் பட்சத்தில் நாங்கள் 170 ரன்களை காக்க வேண்டுமென சவாலை எடுத்துக் கொண்டோம். பெரிய போட்டிகளுக்கு இது ஒரு பயிற்சியாக இருக்கும். “

மேலும், ” நினைத்தது போல 170 ரன்களுக்குள் அவர்களை நாங்கள் ஆல் அவுட் செய்தோம். நாங்கள் இந்திய அணியின் புதிய தலைமுறை, அந்த வித்தியாசம் பெரிதாக தெரிகிறது என நினைக்கிறேன். எதிரணியை ஆதிக்கம் செலுத்தினால், அதனை போட்டி முடியும் வரை தக்க வைக்க வேண்டும். அதே போல அணிக்குள் எங்களிடம் ஒரு பேச்சு உண்டு. போட்டி முடிந்தவுடன் அது அவ்வளவு தான். அந்த வெற்றியிலேயே தங்கிவிட முடியாது. அடுத்து நிறைய உள்ளன. ” என்றார் ரவி பிஷ்னாய்.

- Advertisement -

சூரியகுமார் யாதவ் மற்றும் கம்பீர் தலைமையிலான புதிய இந்திய அணி சிறப்பான பிளானுடன் அணுகி வருகிறது. இது அணியின் எதிர்காலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நல்ல திட்டத்துடன் செயல்பட்டு வருகிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles