முன்னாள் இந்திய மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு முழு நேர வர்னையாளகராக பணி செய்து வருகிறார். அந்நிகழ்ச்சியில் ஆட்டம் பற்றி பல்வேறு விமர்சனங்கள், விவாதங்கள், கேள்விகளுக்கு பதில் ஆகியவற்றை கொடுக்கிறார்.
அந்த வகையில் அண்மையில் கேட்கப்பட்ட ஓர் சுவாரசியமான கேள்விக்கு நுணுக்கமான பதில்சிஸ் வழங்கியுள்ளார். தினேஷ் கார்த்திக்கிடம் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அல்லது விராட் கோஹ்லி இரண்டில் ஒருவரை தேர்வு செய்யுமாறு கேட்டனர்.
அதற்கு கார்த்திக், உடனே விராட் கோஹ்லி தான் என்று கூறினார். மேலும் அவருடன் தான் வாழ்நாள் முழுவதும் கிரிக்கெட் விளையாட ஆசைபடுவதாகவும் கூறினார். அவர் கூறிய காரணம், ” நீங்கள் ரன்கள் எண்களைக் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால் டெஸ்ட்டில் ஜோ ரூட் முன்னிலையில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் டெஸ்ட் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு அவருக்கு மட்டுமே அதிகம் உள்ளது. “
” ஆனால் மறுபக்கம் விராட் கோலி மூன்று வடிவக் கிரிக்கெட்டிலும் ஒரே சமமாக சிறப்பாக விளையாடி வருகிறார். நடப்பு கிரிக்கெட்டில் அதை சீராக செய்யும் வீரர் கோலி தான். அதனால் நான் வாழ்நாள் முழுவதும் எந்த வீரருடன் பேட்டிங் செய்ய வேண்டுமெனக் கேட்டால், நான் விராட் கோலியைத் தான் தேர்ந்தெடுப்பேன். ” என்று கூறினார் தினேஷ் கார்த்திக்.
மேலும் விராட் கோலியுடன் விளையாடிய அனுபவத்தையும் பகிர்ந்தார். ” பத்து ஆண்டுகளுக்கு மேல் நான் அவருடன் விளையாடியுள்ளேன் ஒவ்வொரு போட்டி, ஒவ்வொரு தொடருக்கும் கோலி எவ்வளவு ஆர்வத்துடன் பயிற்சியுடன் களமிறங்குவார் என்பதை நான் அறிவேன். நீங்கள் அவரை கேலியாக விமர்சனம் செய்தால், ஏண்டா இப்படி பேசினோம் என்ற அளவுக்கு அவரது பேட்டிங் மூலம் பதிலடி கொடுப்பார். ” என புகழ்ந்து தள்ளினார்.

