இல்லாதபோது அருமை புரியுதா.. அவர் மட்டும் இல்லனா இந்திய டீம் பூஜ்ஜியம்… பாகிஸ்தான் ஜுனைட் கான் விமர்சனம்

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் போட்டி தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. ஒரு நாள் போட்டிகளுக்கான உலக தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணி ஏழாவது இடத்தில் இருக்கும் இலங்கை அணியிடம் 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒரு நாள் போட்டி தொடரை இழந்திருக்கிறது.

- Advertisement -

முன்னதாக இரண்டாவது ஒருநாள் போட்டியை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி நேற்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததோடு ஒரு நாள் போட்டி தொடரையும் இழந்தது. இது பல்வேறு தரப்பிலிருந்தும் இந்திய அணிக்கு எதிரான விமர்சனங்களை ஏற்படுத்தி இருக்கிறது.

- Advertisement -

இந்தப் போட்டி தொடரில் சுழற் பந்து வீச்சுக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் அணுகுமுறை கேள்விக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்து வீச்சாளர் ஜுனைத் கான் இந்திய அணியின் பந்துவீச்சை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்து வீச்சு பூஜ்ஜியம் என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

- Advertisement -

இது தொடர்பாக தனது ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கும் அவர் ” ஜஸ்பிரீத் பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்து வீச்சு பூஜ்ஜியம் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா.? என கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஒரு நாள் போட்டி தொடரில் இலங்கை அணியின் சுழற் பந்து வீச்சுக்கு எதிராக இந்திய பேட்ஸ்மேன்கள் திணறினர். நடந்து முடிந்த மூன்று போட்டிகளிலும் பெரும்பாலான இந்திய அணியின் விக்கெட்டுகளை சுழற் பந்துவீச்சாளர்கள் வீழ்த்தினர்.

இந்தப் போட்டி தொடரில் மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் இந்திய அணியின் பெரும்பாலான விக்கெட்டுகளை சுழற் பந்துவீச்சாளர்கள் கைப்பற்றி இருக்கின்றனர். வேக பந்துவீச்சாளர்கள் வெறும் 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தி இருக்கின்றனர். மேலும் இந்திய அணியின் பந்து வீச்சும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. இந்தத் தொடரின் முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி 142 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறியது.

- Advertisement -

எனினும் அந்த அணியின் பின் வரிசை ஆட்டக்காரர்கள் இலங்கை அணி போராடக்கூடிய இலக்கை எட்ட உதவினர். இரண்டாவது போட்டியிலும் இதே நிலை தொடர்ந்து. இலங்கை அணி 136 ரன்களுக்கு 6 விக்கெட் இழந்து இருந்தாலும் இறுதியாக அந்த அணி 240 ரன்கள் எட்டியது. பந்து திரும்பக்கூடிய இலங்கை மைதானத்தில் 240 ரன்கள் என்பது கடினமான இலக்கு. முன் வரிசையில் இந்தியா விக்கெட் வீழ்த்தினாலும் இறுதியில் வந்த இலங்கை பேட்ஸ்மேன்கள் அணிக்கு தேவையான ரன்களை குவித்ததும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

பும்ரா இந்திய அணியில் இடம்பெறாததால் இறுதிக்கட்டத்தில் விக்கெட்டுகளை வீழ்த்த இந்திய பந்துவீச்சாளர்கள் தடுமாறினர் என கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்தை முன் வைத்திருந்தனர். இதே கருத்தை தான் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜுனைத் கான் தனது சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா முக்கிய பங்காற்றினார். மேலும் அந்த உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் மிகச் சிறப்பாக பந்து வீசி இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற காரணமாக இருந்தார்.

மேலும் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் ரன்களை விட்டுக் கொடுக்காமல் கட்டுக்கோப்பாக பந்து வீசி 15 விக்கெட் வீழ்த்தியதோடு உலகக்கோப்பையின் தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். பும்ராவிற்கு ஒரு நாள் போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டிருந்தது இந்திய அணியின் பந்து வீச்சில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால்தான் பும்ரா இல்லாத இந்திய அணியின் பந்துவீச்சு ஜீரோ என விமர்சித்து இருக்கிறார் ஜுனைத் கான்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles