இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா தற்போது செயல்பட்டு வரும் நிலையில் அவரது காயம் பாண்டியாவுக்கு பெரிய பிரச்சினையாக உள்ளது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி இந்திய அணி குறித்தும் ஹர்திக் பாண்டியா குறித்தும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
கடந்த 2023ம் ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பையில் ஹர்திக் பாடிய விளையாடிக் கொண்டிருந்தபோது காயம் காரணமாக பாதியிலேயே வெளியேறினார். அவரது இழப்பினால் இந்திய அணி தொடரில் ஒரு முக்கியமான பேட்ஸ்மேன் இழந்ததோடு மட்டுமல்லாமல் பந்து வீச்சிலும் இருந்த சில குறைகளால் ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் போனது.
இந்த சூழ்நிலையில் ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டு ஓரளவு சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்திய நிலையில் இந்திய டி20 அணியில் இடம் பிடித்து சிறப்பாக விளையாடி உலகக் கோப்பை வெல்லம் முக்கிய பங்கு வகித்தார். தற்போது கிரிக்கெட்டில் தொடர்ந்து தீவிர கவனம் செலுத்தி வரும் ஹர்திக் பாண்டியா ஒரு நாள் தொடரிலும் தனது உடல் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும், தவறினால் அது இந்திய அணிக்கு பிரச்சினையாக முடியும் என்று ரவி சாஸ்திரி கூறியிருக்கிறார்.
இது குறித்து ரவி சாஸ்திரி விரிவாக கூறும்போது “தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கும் ஹர்திக் பாண்டியா தொடர்ந்த டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கிறேன். எந்த வகையான போட்டியாக இருந்தாலும் அதில் அவர் விளையாட வேண்டும் அப்போதுதான் அவர் டி20 யில் இருந்து ஒரு நாள் கிரிக்கெட்டிற்கும் வருவதற்கு தன்னை வலுவாக உணர்வார்.
அதே நேரத்தில் ஒருநாள் கிரிக்கெட்டை பொருத்தவரை அவர் 10 ஓவர்கள் வீச வேண்டியது அவசியம். இந்த நிலையில் ஒருவர் மூன்று ஓவர்கள் மட்டும் ஒரு நாள் போட்டிகளில் வீசினால் அது அணியின் சம நிலையை பெரிய அளவில் பாதிக்கும். இதனால் ஹர்திக் பாண்டியா முழுமையாக ஓவர்கள் வீசும் படி தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க:இந்தியாவில் சிறந்த வீரர்கள் இப்படித்தான் உருவாகிறார்கள்.. இந்த விஷயத்துல இந்தியா தான் நம்பர் 1 – சல்மான் பட் பேட்டி
இவை அனைத்தையும் தாண்டி ஹர்திக் பாண்டியாவின் உடல் தகுதி குறித்து அவருக்கு மட்டுமே நன்றாக தெரியும் என்பதால் இனி அவர் தன்னை மெருகேற்றிக் கொள்ள எந்த பிரச்சனையும் இருக்காது என்று நினைக்கிறேன். மேலும் டி20 கிரிக்கெட்டில் பெற்ற ஊக்கமும் அவருக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கும். இதனால் இனிவரும் தொடர்களில் பாண்டியா சிறப்பாக இருப்பார் என்று நம்புகிறேன்” என்று கூறியிருக்கிறார்.

