இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி பல்லிகேலே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டி செய்த இந்திய அணி இலங்கை அணிக்கு சவாலான ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கு பெற உள்ளது. இதில் முதல் டி20 போட்டியில் சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி களமிறங்கியது. இதில் டாஸ் பண்ற இலங்கை அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனால் இந்திய அணியின் இன்னிங்சை கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
அதிரடியான தொடக்கத்தை ஆடிய இவர்கள் ஆறு ஓவர்களில் 74 ரன்கள் குவித்த நிலையில் கில் தனது முதல் விக்கட்டினை பறிகொடுத்தார். 16 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 34 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, மற்றொரு ஆட்டக்காரரான ஜெய்ஸ்வாலும் 21 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் என 40 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
அதற்குப் பிறகு கேப்டன் சூரியகுமார் யாதவ் களமிறங்க, அவரோடு ரிஷப் பண்ட் களம் இறங்கி இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினர். அதிலும் குறிப்பாக சூரியகுமார் யாதவ் கேப்டனாக பொறுப்பேற்றாலும் தனது பேட்டிங்கில் எந்தவிதமான அழுத்தத்தையும் உணராமல் எப்போதும் போலவே ஆடினார். வெறும் 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட சூரியகுமார் யாதவ் 8 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்களுடன் 56 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் 49 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க இந்திய அணி இறுதியாக 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. பந்துவீச்சில் இலங்கை அணியின் பத்திரனா நான்கு ஓவர்களில் 40 ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் நான்கு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையும் படிங்க:2014ல் இருந்து நான் இதுக்காக நிறைய உழைத்துள்ளேன்.. என்னுடைய கேப்டன் பொறுப்பு இவர் போலத்தான் இருக்கும் – சூரியகுமார் பேட்டி
இதனால் இந்திய அணி இலங்கை அணிக்கு வெற்றி இலக்காக 214 ரன்கள் நிர்ணயித்திருக்கிறது. தற்போது பேட்டிங் தொடங்கி விளையாடி வரும் இலங்கை அணி இரண்டு ஓவர்களில் 13 ரன்கள் குவித்து விளையாடுகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் நிஷாங்கா 13 ரன்களிலும் குஷால் மெண்டிஸ் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருக்கின்றனர்.

