தற்போது நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்காக ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடினார்கள் என்று தான் கூற வேண்டும்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஆல்ரவுண்டரான அக்சார் பட்டேல் இறுதிப்போட்டி குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 40 ரன்களில் முக்கியமாக மூன்று விக்கெட்டுகளை இழந்து பவர் பிளேவிற்குள் தடுமாறியது. இதற்கு அடுத்து விராட் கோலியோடு ஜோடி சேர்ந்த அக்சார் பட்டேல் அதிரடியாக விளையாடி 31 பந்துகளில் 47 ரன்கள் குவித்த நிலையில் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டபோது அலட்சியமாக ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
குறிப்பாக அந்த போட்டியில் நான்கு சிக்ஸர்களை அடித்து சரியான மொமன்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கடைசி வரை களத்தில் நின்றிருந்தால் இந்திய அணி இன்னும் அதிகமான ரன்களை குவித்திருக்கும். இந்த சூழ்நிலையில் இறுதிப்போட்டியில் 47 ரன்கள் குவித்து விட்டு தான் ஆட்டமிழந்து வெளியேறிய போது பெவிலியினில் உட்கார்ந்து கொண்டிருந்த பும்ரா தன்னிடம் கூறிய கருத்துக்களை தற்போது கூறியிருக்கிறார்.
இது குறித்து அக்சார் பட்டேல் கூறும்பொழுது ” நான் அந்த நேரத்தில் தவறான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினேன். அது முற்றிலும் என்னுடைய தவறுதான். நானும் விராட் கோலியும் அப்போது நன்றாக செட் ஆகியிருந்தோம். நாங்கள் இருவரும் நினைத்து நின்று இருந்தால் இன்னும் அதிகமான ரன்களை குவித்திருக்க முடியும். அப்போதுதான் விராட் கோலி மொமன்டத்தை மாற்றி அதிரடியாக அடிக்க ஆரம்பித்தார். நான் ஆட்டமிழந்த விதம் குறித்து எனக்கு என் மீது கோபம் ஏற்பட்டது.
அது பேட்டிங் வேகத்தை அதிகப்படுத்த சரியான நேரமாக இருந்தது. நாங்கள் இன்னும் மேற்கொண்டு மூன்று மூவர்கள் விளையாடி இருந்தால் இன்னும் நல்ல நிலையில் ரன்களை குவித்திருப்போம். அப்போது நான் ஓய்வரைக்கு திரும்பிய போது அருகில் அமர்ந்த பும்ரா ‘நீங்கள் இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் முழுதாக பந்து வீச வேண்டும். அணிக்கு நீங்கள் நல்ல ரன்களை கொடுத்து விட்டீர்கள். எனவே இனி அடுத்து செய்ய வேண்டியதை பார்க்கலாம்’ என்று கூறினார்.
இதையும் படிங்க:கம்பீரப் பத்தி எனக்கு நல்லா தெரியும்.. இந்த 2 திட்டங்களை நிச்சயம் கொண்டு வருவார்- தினேஷ் கார்த்திக் பேட்டி
அவர் கூறிய வார்த்தைகள் எனக்கு அதற்குப் பிறகு நம்பிக்கையை ஏற்படுத்தியது. அதுபோலவே நாங்கள் சிறப்பாக விளையாடி இறுதிப்போட்டியில் வெற்றியும் பெற்று தற்போது டி20 உலக கோப்பையையும் கைப்பற்றி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

