தோனிய பத்தி உங்களுக்கு என்ன தெரியும்.. என்ன முட்டாள்தனமான கேள்வி இது.. தோனிக்கு ஆதரவாக பேசிய ஹர்பஜன் சிங்

என்னதான் திறமையான வீரர்கள் என்று ஒரு அணியில் இருந்தாலும், அவர்களை சரியாக வழி நடத்தினால் மட்டுமே எந்தவிதமான வெற்றிகளையும் பெற முடியும்.

- Advertisement -

அதற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. இளம் வீரர்களை வைத்து 2007ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை வென்ற போதும் சரி, 2011 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பையை வென்றபோதும் சரி ஒரு கேப்டனாக அவர் எப்போதுமே தனது அணியை சிறப்பாக வழி நடத்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர், தோனியை இன்னொரு வீரரோடு வைத்து கம்பேர் செய்து இருவரில் சிறந்த பேட்ஸ்மேன் யார்? என்று கேட்டதற்கு ஹர்பஜன் சிங் தனது கோபமான பதிலை வெளியிட்டு இருக்கிறார். ஹர்பஜன் சிங்கை பொருத்தவரை தோனியை பற்றி எப்போதாவது சில விஷயங்கள் கூறினால் அது சர்ச்சையாகவும் மாறி இருக்கிறது.

- Advertisement -

2007ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இறுதி ஓவரை ஜோஹிந்தர் சர்மாவுக்கு கொடுத்தது மகேந்திர சிங் தோனியின் முடிவு தான் என்று கருத்துக்கள் நிலவிய நிலையில் ஹர்பஜன் சிங் நாங்கள் அனைவரும் சேர்ந்துதான் இறுதி ஓவரை அவருக்கு கொடுக்க முடிவு செய்தோம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்த சூழ்நிலையில் அது பரபரப்பாக விவாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர், முகமது ரிஸ்வான் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவரது புகைப்படங்களை வைத்து இந்த இருவரில் யார் சிறந்த பேட்ஸ்மேன்? என்ற கேள்வியை எழுப்பினார். இது இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங்குக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த ஹர்பஜன் சிங் “என்ன ஒரு முட்டாள்தனமான கேள்வியாக இருக்கிறது. இந்த கேள்வியை முகமது ரஸ்வான் இடம் கேட்டாலும் அவரே தோனி தான் என்று நேர்மையாக பதில் சொல்வார்.

- Advertisement -

எனக்கு முகமது ரிஸ்வானை மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் நல்ல செயல் திறனுடன் விளையாடக் கூடிய ஒரு வீரர். ஆனால் இப்போதும் கூட மகேந்திர சிங் தோனி ஸ்டெப்புகளுக்கு பின்னால் உலகின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக இருக்கிறார்” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். ஹர்பஜன் சிங்கே தோனி குறித்த அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை கூறும் நிலையில் தற்போது தோனிக்கு ஆதரவாக பேசி இருப்பது தோனி ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இதையும் படிங்க:கம்பீர ஏன் இப்படி பண்றாரு எனக்கு புரியல.. இவரை எல்லாம் நான் என் டீம்ல கூட எடுக்க மாட்டேன்.. ஸ்ரீகாந்த் ஆதங்கம்

ஹர்பஜன்சிங் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2007 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் இந்திய அணி உலக கோப்பையை வென்ற போது அதில் ஹர்பஜன் சிங் பங்கும் கணிசமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles