சமீபத்தில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை பெற்றது பல இந்திய வீரர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
இந்திய அணியில் காயம் மற்றும் தனிப்பட்ட பிரச்சனை போன்ற சிக்கல்களுக்கு மத்தியில் இடம் பெற்ற இந்திய வீரர்களுக்கு இது ஆறுதலளிக்கும் வகையில் ஒன்றாக அமைந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்றது தற்போது வரை கிரிக்கெட் வட்டாரங்களில் ஹாட் டாபிக்காக உள்ளது. ஏனென்றால் இந்த உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணி வீரர்களுக்கு தனிப்பட்ட முறையில் பிரச்சனைகள் மற்றும் பல்வேறு சூழ்நிலைகளுக்கு நடுவே இந்த உலகக் கோப்பையில் இந்தியா விளையாடியது. மேலும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இந்த தலைமுறைகளின் சிறந்த பேட்ஸ்மேன்களாக விளங்கினாலும் அவர்களால் தனிப்பட்ட முறையில் ஐசிசி தொடர்களை வெல்ல முடியவில்லை என்ற ஒரு கருத்தும் நிலவியது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் துணை கேப்டன் ஆன ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அவர் சந்தித்த தாழ்வுகள் மற்றும் குடும்ப பிரச்சினைகள் போன்ற சிக்கல்களுக்கு நடுவிலேயே இதில் பங்கேற்றார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் முக்கியத் தூணாக விளங்கும் பும்ரா டி20 உலக கோப்பைக்கு முன்பாக காயத்தால் பல்வேறு சிக்கல்களை சந்தித்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பந்துவீச்சாளராக பதவி வகித்து தற்போது விலக உள்ள பராஸ் மாம்ப்ரே பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “இந்த டி20 உலக கோப்பையில் முக்கிய கிரெடிட் பும்ராவுக்கு கொடுத்தாக வேண்டும். காயத்திலிருந்து மீண்டு வந்த விதம் அவரைப் பார்ப்பதற்கு மனதுக்கு இதமாக இருந்தது.
பலர் முதுகு அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டும் திரும்பி வந்து அதை விட சிறப்பாக செயல்பட்டு நான் ஒருபோதும் பார்த்ததில்லை. பும்ரா அந்த மாதிரியான ஒரு திறமையான வீரர். அவர் ஒரு தலைமுறையின் பந்துவீச்சாளராக திகழ்கிறார். பும்ரா தனது வேலையை நன்கு அறிந்தவர் ஒரு பந்துவீச்சாளரின் பணி என்பது அணியை வெற்றிப் பாதைக்கு மட்டுமே அழைத்துச் செல்லாமல் பின்வரும் பந்துவீச்சாளர்களை சிறப்பாக வழி நடத்துவதும் ஆகும்.
இதையும் படிங்க:இந்திய அணியில் யாரை ரொம்ப பிடிக்கும்.. விராட்டா? பும்ராவா? பாண்டியாவா?- ரோஹித் சர்மாவின் சுவாரசிய பதில்
பும்ரா அதை சிறப்பாக செய்து வருவது அற்புதமான விஷயம்” என்று கூறி இருக்கிறார். தற்போது இவர் பதவி விலக உள்ள நிலையில் கௌதம் கம்பீர் தலைமையிலான குழு புதிய பேட்டிங் பயிற்சியாளர் மற்றும் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் என புதிய கூட்டணியுடன் களமிறங்க உள்ளது.

