இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது.
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் இந்திய அணி ஏற்கனவே மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் கடைசி போட்டி இன்று ஹராரே மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதனால் பேட்டிங் தொடங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களமிறங்கினர்.
கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடி 93 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் இந்த போட்டியில் ஐந்து பந்துகளில் இரண்டு சிக்ஸர்களுடன் 12 ரன்கள் குவித்த நிலையில் விரைவிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்குப் பின்னர் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா 14 ரன்களில் வெளியேற, கில் 13 ரன்களில் வெளியேறினார்.இதனால் நான்கு ஓவர்களில் 40 ரன்களுக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் மாட்டிக் கொண்ட இந்திய அணிக்கு ரியான் பராக் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
சஞ்சு சாம்சன் ஒரு முனையில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த, மற்றொரு முனையில் ரியான் பராக் பொறுமையாக விளையாடி 24 பந்துகளில் 22 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். 45 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 58 ரன்கள் குவித்த நிலையில் வெளியேற, இந்திய அணி இறுதியாக 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் குவித்தது.
சிறப்பாக பந்து வீசிய ஜும்பாப்வே அணி வீரர் முசார் பாணி நான்கு ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். மேலும் மற்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சாளர்களான சிக்கந்தர் ராசா , மவுட்டா, கர்வா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினார்கள். இந்திய அணி தரப்பில் கடந்த இரு போட்டியிகளில் சிறப்பாக விளையாடிய ருத்ராஜ் இந்தப் போட்டியில் களம் இறக்கப்படவில்லை.
இதையும் படிங்க:தோனி பும்ராவுக்கே இடம் இல்லை.. யுவராஜ் வெளியிட்ட ஆல் டைம் பேவரைட் அணி.. ஆச்சரியப்படுத்தும் பிளேயிங் லெவன்
பின்னர் வெற்றி இலக்கை நோக்கி விளையாடி வரும் ஜிம்பாப்வே அணி சற்று முன் வரை இரண்டு ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 15 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது மதிவேர் 0 ரன்னில் முகேஷ் குமாரின் பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். மருமணி மற்றும் பென்னட் ஆகியோர் களத்தில் இருக்கின்றனர்.

