உலகின் ஓய்வு பெற்ற மூத்த வீரர்கள் விளையாடி வரும் உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய சாம்பியன்ஸ் மற்றும் பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணிகள் மோதின.
மொத்தமாக இந்தத் தொடரில் ஆறு அணிகள் பங்கேற்ற நிலையில் இறுதி போட்டிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தகுதி பெற்று அதில் இந்திய அணி சாம்பியன் கோப்பையையும் கைப்பற்றி அசத்தியிருக்கிறது.
உலகின் ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்று விளையாடி வரும் உலக லெஜெண்ட் சாம்பியன்ஷிப் டி20 தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் அரையிறுதிக்கு வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா சாம்பியன்ஸ் அணிகள் தகுதி பெற்ற நிலையில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியையும் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இங்கிலாந்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஆறு விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக மிடில் வரிசையில் களமிறங்கிய சோயப் மாலிக் 36 பந்துகளில் 41 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் ஓரளவு ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
பந்துவீச்சை பொறுத்தவரை அனுரீத் சிங் அதிகபட்சமாக மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் பாகிஸ்தான் அணி 156 ரன்கள் குவித்தது. இதன் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர் ராயுடு சிறப்பாக விளையாடி 30 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களுடன் 50 ரன்கள் குவித்தார்.
அதன் பிறகு இறுதிக் கட்டத்தில் சிறப்பாக விளையாடிய யூசுப் பதான் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் 30 ரன்கள் குறித்து இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இதனால் இந்திய அணி 19.1 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. சிறப்பாக விளையாடி 50 ரன்கள் குவித்த ராயுடு ஆட்டநாயகன் விருதையும், இந்த தொடர் முழுவதுமே சிறப்பாக விளையாடிய யூசுப் பதான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
இதையும் படிங்க:ஜெய்ஸ்வால் கில் அபாரம்.. ஜிம்பாப்வேவை தவிடு பொடியாக்கிய இந்தியா.. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
ஏற்கனவே டி20 உலக கோப்பையில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், தற்போது லெஜெண்ட் லீக் தொடரிலும் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தப் போட்டி 2007 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை ஒரு முறை நினைவு கூர்ந்தது.

