ஜெய்ஸ்வால் கில் அபாரம்.. ஜிம்பாப்வேவை தவிடு பொடியாக்கிய இந்தியா.. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கிடையேயான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இதன் ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்தத் தொடரில் ஜிம்பாப்வே ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி ஜிம்பாவேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் இதன் நான்காவது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த வகையில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாவே அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு 152 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இதில் தொடக்க ஆட்டக்காரர் மறுமணி 32 ரன்களும் கேப்டன் சிக்கந்தர் ராசா அதிகபட்சமாக 46 ரன்களும் குவித்தனர். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேற, ஜிம்பாப்வே இறுதியாக 152 ரன்கள் குவித்தது. இதில் பந்துவீச்சு தரப்பில் கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளும், தேஷ் பாண்டே வாஷிங்டன் சுந்தர், சிவம் தூபே, அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜெய்ஸ்வால் மற்றும் கில் ஜோடி இருவருமே அற்புதமாக விளையாடி ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்கள். அதிலும் குறிப்பாக ஜெய் ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் இந்திய அணியை மிக வேகமாக வெற்றி பெற வைத்தார். 53 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஜெய்ஸ்வால் இதில் 13 பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் விளாசி 93 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கேப்டன் கில் 39 பந்துகளை எதிர்கொண்டு ஆறு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் என 58 ரன்கள் விளாசினார். இவர்கள் இருவருமே 92 பந்துகளில் 156 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். 92 ரன்கள் குவித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இதையும் படிங்க:நம்பர் 7 வெச்சு.. ருத்ராஜ் நம்மள கிண்டல் பண்றாரு.. அதை முதல்ல புரிஞ்சுக்கோங்க.. ரசிகர்களுக்கு அஸ்வின் அறிவுரை

இதன் மூலம் இந்திய அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில் ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது. இந்த சூழ்நிலையில் நாளை நடைபெற உள்ள சம்பிரதாயமான போட்டியை ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்று ஆறுதலுடன் முடிக்க முயற்சிக்கும். அல்லது இந்திய அணி அடுத்த போட்டியிலும் வெற்றி பெற்று வெற்றிகரமாக இந்தியா திரும்புமா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles