ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் மூன்றாவது வரிசையில் ருத்ராஜ் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஜிம்பாப்வே தொடரில் விளையாடி வரும் ருத்ராஜ் குறித்து இந்திய அணி வீரர் அஸ்வின் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஐபிஎல்லில் சிஎஸ்கேவின் தற்போதைய கேப்டனாக செயல்பட்டு வரும் ருத்ராஜ் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு சமீபத்தில் டி20 தொடரில் விராட் கோலி தனது ஓய்வினை அறிவித்த நிலையில் ருத்ராஜ் அந்த இடத்தில் களமிறங்கி சிறப்பாக விளையாடிக் கொண்டிருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் தோனி கண்டெடுத்த அற்புதமான வீரர்களில் இவரும் ஒருவர்.
சமீபத்தில் ஜூலை 7ஆம் தேதி மகேந்திர சிங் தோனியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய ருத்ராஜ் அந்தப் போட்டியில் 7 ரன்கள் குவித்தார். அன்றைய நாளில் 7ஆம் தேதி தோனியின் பிறந்த நாளும் வந்ததால் ரசிகர்கள் ‘thala for reason’ என்ற ஹேஷ்டாக்கை இணையதளத்தில் பரவ விட்டனர். அது அப்போது இணையதளத்தில் மிகவும் வைரல் ஆகியது. இந்த சூழ்நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான அடுத்த போட்டியில் 49 பந்துகளில் 77 ரன்கள் குவித்தார்.
இதுவும் ஏழாம் நம்பரோடு தொடர்புடையதாக இருப்பதால், இதையும் ரசிகர்கள் இணையதளங்களில் வைரல் ஆக்கினர். அதற்கடுத்து நடைபெற்ற மூன்றாவது போட்டியிலும் ருத்ராஜ் 49 ரன்கள் விளாசினார். இதனை ரசிகர்கள் ஏழாம் எண்ணோடு மற்றொரு ஏழாம் எண்ணை பெருக்கினால் 49 வரும் என்று அதையும் வைரல் ஆக்கினர். இதை அறிந்த ருத்ராஜ் பதிலுக்கு அவரும் சமூக வலைதளத்தில் அவரது தொப்பி நம்பரை பதிவிட்டு ருத்ராஜ் 8+8=16.அதில் 6+1=7 என்று பதிவிட்டு உங்கள் ட்ரெண்டில் நானும் இணைந்து கொள்கிறேன் என்றார்.
இதை அறிந்த இந்திய அணியின் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இது குறித்து பேசும் போது ” ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடர் மூலமாக இந்திய அணி அடுத்த உலக கோப்பைக்கான அணியை தயார் செய்து வருகிறது. சில ஆண்டுகளாக இந்திய அணியில் விளையாடி உள்ள வீரர்கள் மீண்டும் தேர்வாகியுள்ளனர்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா.. மூத்த வீரர்கள் அசத்தல்.. பாகிஸ்தானோடு இன்று இறுதிப்போட்டி
இதில் டாப் போரில் கில், ருத்ராஜ், அபிஷேக் ஷர்மா, ஜெய்ஸ்வால் ஆகியோர் இருக்கின்றனர். இதில் அபிஷேக் ஷர்மாவுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. கில் மற்றும் ருத்ராட்ஜூக்கு தங்களுக்கு கொடுக்கப்பட்ட ரோலில் சிறப்பாக விளையாடியிருக்கின்றனர். குறிப்பாக ருத்ராஜ் இன்னிங்சை வைத்து ரசிகர்கள் ட்ரண்ட் செய்து வருகிறார்கள். இந்த ட்ரெண்ட் மூலமாக ருத்ராஜ் ரசிகர்களை கிண்டல் செய்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்று நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.

