இந்திய கிரிக்கெட் அணி டி20 உலக கோப்பையை வென்றது வரலாற்று நிகழ்வுகளில் முக்கிய தருணமாக இடம் பிடித்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் உலகக் கோப்பை வென்ற பிறகு அதை வாங்க சென்ற ரோகித் சர்மா வித்தியாசமான முறையில் நடந்து சென்று வாங்கியதற்கான விளக்கத்தை பிரதமர் மோடியிடம் தெரிவித்திருக்கிறார்.
17 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று சரித்திரத்தில் இடம் பிடித்தது. இந்த வெற்றிக்கு ஒரு சில வீரர்கள் மட்டுமல்லாமல் அனைத்து வீரர்களுமே சிறப்பாக செயல்பட்டு ஒரு போட்டியில் கூட தோல்வி பெறாமல் இந்த உலகக் கோப்பையை இந்திய அணிக்கு கொடுத்து இருக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு இந்தியா வந்தடைந்த இந்திய அணி வீரர்களுக்கு இந்திய மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். டெல்லி விமான நிலையத்திலிருந்து நேராக பிரதமரை சந்தித்து விட்டு, இந்திய அணி உலக கோப்பையை வென்றதை வாழ்த்திய பிரதமர் உலகக்கோப்பை வாங்க சென்ற போது அந்த வித்தியாசமான நடைக்கு காரணம் என்ன என்பது குறித்தும் ரோஹித் சர்மாவிடம் கேட்டு அறிந்திருக்கிறார்.
இது குறித்து ரோஹித் சர்மா அளித்த விளக்கம் பின்வருமாறு “நாங்கள் விளையாடி வெற்றி பெற்று தருணத்தை மறக்காமல் எங்கள் நினைவிலேயே வைத்திருக்க விரும்பினோம். இந்த வெற்றிக்காக நாங்கள் பல ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறோம். அதனால் இது எங்கள் நினைவில் எப்போதுமே இருக்கும். அதற்காகத்தான் மைதான மண்ணை சாப்பிட்டேன். ஏனென்றால் இந்த மைதானத்தில் தான் நாங்கள் உலகக் கோப்பையை வென்றிருக்கிறோம்.
ஏனென்றால் இந்த மைதானமும் எங்களோடு ஒன்றியதாக இருக்கும் என்று நினைத்து அவ்வாறு செய்தேன். கோப்பையை வாங்க சென்ற போது இந்த தருணத்தை நாம் அவ்வளவு எளிதாக மறந்துவிடக்கூடாது என்று வீரர்கள் என்னிடம் சொன்னார்கள். அது மட்டுமல்லாமல் கோப்பை வாங்கும் பொழுது வித்தியாசமாக நடக்கும் படி என்னிடம் குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகியோர் கூறினார்கள்.
இதையும் படிங்க:ரோஹித் கோலி இடத்தை நிரப்ப 4 பேர் இருக்காங்க.. ஆனா கேப்டனா இருக்கிற தகுதி அவருக்கு மட்டும்தான் இருக்கு- சபா கரீம் பேட்டி
அவர்கள் கூறியதால் தான் நான் அவ்வாறு நடந்து சென்று கோப்பையை வாங்கினேன்” என்று கூறி இருக்கிறார். இதற்குக் காரணம் குல்தீப் யாதவ் மற்றும் சகால்தான் என்ற உண்மை தற்போது வெளி வந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது மூன்று முன்னணி வீரர்களும் ஓய்வு பெற்றுள்ள நிலையில் அவர்கள் இனி அடுத்து வரும் டெஸ்ட் தொடர் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டும் கவனத்தை செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கில் தலைமையிலான இந்திய அணி தற்போது ஜிம்பாவேவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 தொடரில் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது

