“டிராவிட் அப்படி சொல்லவில்லையென்றால் பைனலில் ஆடியிருக்கவே..” – பைனலுக்கு முன் விராட் கோலி – டிராவிட் இடையே நடந்த உரையாடல்!

பைனலுக்கு முன்பு வரை போதிய அளவு பங்களிப்பை கொடுக்காமல் இருந்த எனக்கு, ராகுல் டிராவிட் சொன்ன அறிவுரையால் தான் சிறிது நம்பிக்கை வந்தது என்று பிரதமருடன் நடந்த உரையாடலின் போது வெளிப்படையாக பேசியுள்ளார் விராட் கோலி.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்க நாடுகள் இணைந்து நடத்திய டி20 உலக கோப்பையில் இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்தது. போட்டி முடிந்த பின் அனைத்து வீரர்களும் உணர்ச்சி வசமாக காணப்பட்டனர்.

- Advertisement -

தொடர் முழுவதும் எதிர்பார்த்த பங்களிப்பை கொடுக்கத் தவறிவந்த முன்னாள் கேப்டன் விராட் கோலி, பைனலுக்கு முன்பு வரை விளையாடிய 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். பைனலுக்கு முன்பு பயிற்சியில் ஈடுத்திருந்த நேரத்தில், போதிய நம்பிக்கை இல்லை என்பதை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

அப்போது டிராவிட் கொடுத்த சில நம்பிக்கை வார்த்தைகள் மற்றும் அணியின் கேப்டன் கொடுத்த உற்சாகம் அனைத்துமே கைகொடுத்து உதவியதாக, பிரதமர் மாளிகையில் இந்திய அணி வீரர்கள் சாம்பியன் கோப்பையுடன் சென்று பிரதமரை சந்தித்து உரையாடிய போது விராட் கோலி பகிர்ந்து கொண்டார்.

“அந்த ஒரு நாளை என்னால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. பைனலுக்கு முன்புவரை தொடர் முழுவதும் எனக்கு சிறப்பாக அமையவில்லை. ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி விட வேண்டும் என்று ஏங்கினேன்.”

- Advertisement -

“பைனல் போட்டிக்கு முன்பு ராகுலிடம் பேசிய போது கூட, நான் போதிய பங்களிப்பை கொடுக்கவில்லை. நான் அணியில் எனக்கு கிடைத்த வாய்ப்பை நியாயப்படுத்தவில்லை என தெரிவித்தேன். சரியான சூழ்நிலை வரும் பொழுது உனக்கான ஆட்டத்தை நீ சிறப்பாக வெளிப்படுத்துவாய் என்றார்.”

“மேலும், பைனல் பேட்டிங் இறங்கும்போது கூட ரோகித் சர்மாவிடம் ‘எனக்கு போதிய நம்பிக்கை இல்லை’ என்றே சொன்னேன். முதல் நான்கு பந்துகளை எதிர்கொண்டு மூன்று பவுண்டரிகள் அடித்தேன். அந்த நேரத்தில் ரோகித் சர்மாவிடம் வந்து, ‘என்ன மாதிரியான போட்டி இது? சில நாட்களில் ஒரு ரன் வருவதே திணறலாக இருக்கிறது. இப்போது தானாக நடக்கிறது என்று சொன்னேன்”.

“அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்திருந்ததால், இனி ஆட்டத்தை என்னுடைய போக்கில் எடுத்துச் செல்ல முடியாது. நிதானமாக எதிர்கொண்டு தக்க நேரத்தில் என்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தினால் சரியாக இருக்கும் என்று என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். நமக்கு நடக்க வேண்டியது அந்தந்த நேரத்தில் சரியாக நடக்கும். எதுவும் நம் கையில் இல்லை என்பதை புரிந்து வைத்திருந்தேன்.” என விராட் கோலி உருக்கமாக பகிர்ந்துகொண்டார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles