சூப்பர் 8க்கு முன்னாடி நாங்க இத பண்ணலனா இந்தியாகிட்ட மாட்டிக்குவோம்.. ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் பேட்டி

ஒன்பதாவது டி20 கிரிக்கெட் போட்டிகள் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இதில் இன்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் சூப்பர் 8 சுற்றுக்கு முன்பாக ஆப்கானிஸ்தான் அணியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த டி20 உலக கோப்பையில் வளர்ந்து வரும் ஆப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. முன்னணி அணிகளான நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளை லீக் சுற்றோடு வெளியேறிய நிலையில், ஆப்கானிஸ்தான அணியின் தற்போது சிறப்பான வெற்றிகளை பதிவு செய்து அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 104 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருக்கிறது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பூரான் 53 பந்துகளில் ஆறு பவுண்டரி, மற்றும் 8 சிக்சர்களுடன் 98 ரன்கள் குவித்து எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மதுல்லா இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.

பின்னர் 219 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கில் படுமோசமாக செயல்பட்டு 114 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் தோல்வி குறித்து அணியின் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஜோனதன் டிராட் விரிவாக கூறும்பொழுது “இந்த போட்டியில் நாங்கள் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்திருக்கிறோம். அடுத்த சுற்றுக்கு முன்னதாக நாங்கள் எங்கள் பகுதியில் நிறைய வேலைகள் செய்ய வேண்டி இருக்கிறது. அடுத்த போட்டியில் நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கிறோம். டி20 கிரிக்கெட் பொருத்தவரை ஒரு ஓவர் சரியாக அமையவில்லை என்றால், அடுத்த ஓவரில் அதனை சரி செய்தாக வேண்டும். இரண்டாவது ஓவரிலும் இதே பிரச்சினை நீடித்தால் ஆட்டத்தின் மீதி 18 ஓவர்களிலும் சிக்கல் ஏற்படும்.

இதையும் படிங்க:தோனிக்கு இந்தியாவில் எல்லாமே சொந்த மைதானம்தான்.. அவர் உள்ளே நுழையும் போது காதுகள் இருக்காது.. ராணா பேட்டி

எங்களுக்கு குறிப்பாக நாங்கள் வீசிய இரண்டு ஓவர்களில் தான் 60 ரன்கள் சென்று விட்டது. இதுதான் உண்மை. கிரிக்கெட்டில் கருப்பு வெள்ளை பக்கங்கள் என்று எப்போதுமே இருக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நாங்கள் எங்களுடைய பேட்டிங்கில் ஏமாற்றம் அடைந்தேன். நாங்கள் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். அதுவே எங்கள் தோல்விக்கு காரணமாக அமைந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles