எங்கள் பேட்ஸ்மேன்கள் எங்களை வீழ்த்தி விட்டனர்.. ஓபனிங் நல்லாதான் இருந்துச்சு ஆனா.. தோல்விக்கு பின்னர் கில் பேட்டி

நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தியது. குஜராத் அணியின் தோல்விக்கு காரணமாக அணியின் கேப்டன் கில் அணியின் பேட்ஸ்மேன்களை குறை கூறியிருக்கிறார்.

- Advertisement -

லக்னோவில் நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் குவித்தது. அணியின் கேப்டன் கே எல் ராகுல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்துகளில் 33 ரன்கள் குவித்தார். மற்ற தொடக்ககட்டக்காரர் டிகாக்ஆறு ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

அதற்கு பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ஸ்டானிஸ் அதிரடியாக விளையாடி 43 பந்துகளில் நான்கு பவுண்டரிகள், இரண்டு சிக்சர்கள் என 58 ரன்கள் விளாசி லக்னோ அணியின் ஸ்கோர் உய ர உதவினார். கடைசி கட்டத்தில் பூரான் 22 பந்துகளில் 32 ரன்கள் குவிக்க, பதோனி 11 பந்துகளில் 20 ரன்கள் குவித்தார். இதனால் லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 165 ரன்கள் குவித்தது.

- Advertisement -

குஜராத் அணி தரப்பில் உமேஷ் யாதவ் இரண்டு விக்கெட்களும், நல்கண்டே இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். இதற்குப் பின்னர் 166 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு, தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய சாய் சுதர்சன் 31 ரன்கள் குவித்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கில் 19 ரன்களில் வெளியேற, அதற்குப் பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்பரன்களில் வெளியேறியதால் குஜராத் அணி சிக்கலில் சிக்கியது.

இறுதியாக ராகுல் திவேட்டியா மட்டும் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர்கள் என முப்பது ரன்கள் குவித்தார். லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சினால் குஜராத் அணி இறுதியில் 18.5வது ஓவரில் 130 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. லக்னோ அணித்தரப்பில் யஷ் தாக்கூர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

எனவே குஜராத் அணியின் தோல்வி குறித்து கில் கூறும் பொழுது
“ஆடுகளம் பேட்டிங்க்கு நல்ல சாதகமாக இருந்தது. ஆனால் எங்களின் மோசமான பேட்டிங் செயல் திறன் காரணமாக வெற்றி பெற முடியவில்லை. நாங்கள் சிறப்பான தொடக்கத்தினை பெற்றோம். ஆனால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை இழந்தோம். எங்கள் பந்துவீச்சாளர்கள் அற்புதமாக பந்து வீசினர். அவர்களை 160 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது பெரிய விஷயம்.

இதையும் படிங்க:சிஎஸ்கேவுக்கு புதிய சிக்கல்.. நட்சத்திர வீரர் விலகல்.. இருப்பினும் லக்னோ அணி சிறப்பான வெற்றி

ஆனால் எங்கள் பேட்ஸ்மேன்கள் எங்களை வீழ்த்தி விட்டனர் என்பது தான் உண்மை. டேவிட் மில்லர் ஆட்டத்தை ஓரிரு ஓவர்களில் மாற்றக்கூடிய தனித்தன்மை வாய்ந்தவர். இந்த மாதிரியான இலக்குகள் எங்களால் சேஸ் செய்யக் கூடியது தான். பவர் பிளேவின் கடைசி ஓவரில் நான் தவறாக விளையாடியதால் எதிர்பாராத விதமாக ஆட்டம் இழந்தேன். எங்களது பந்துவீச்சாளர்கள் பிரமாதமாக பதிவு செய்தார்கள். நாங்கள் அவர்களை 160 முதல் 165 ரன்களுக்குள் கட்டுப்படுத்த நினைத்தோம்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles