கம்மின்ஸ் காட்டிய பெருந்தன்மை… தோனி வந்துட கூடாதுன்னு தான் அப்படி பண்ணிங்க.. கைஃப் விமர்சனம்.. நடந்தது என்ன.?

17 வது ஐபிஎல் சீசனில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது.

- Advertisement -

ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் அணியும் விளையாடிய போட்டியில் 277 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி குவித்து சாதனை படைத்தது

- Advertisement -

எனவே இப்போட்டியும் அதேபோன்று சென்னை அணி அதிக ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ரசிகர்களை ஏமாற்றும் விதமாக ஆடுகளம் முதலில் மெதுவாக காணப்பட்டது. எனவே சென்னை அணி பேட்ஸ்மேன்கள் ரன்கள் குவிக்க தடுமாறிய வேளையில் இதனை ஹைதராபாத் அணியினர் நன்கு பயன்படுத்திக் கொண்டனர்.

- Advertisement -

மெதுவான பந்துகளை வீசி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்தினர். அதிலும் குறிப்பாக உனத்காட், அனுபவ வீரர் ரகானேவுக்கு ஸ்லோயர் பந்துகளாக வீசி அவரை கட்டுப்படுத்தினார். இதன் பிறகு ஆல்ரவுண்டர் சிவம் தூபே அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்க, 24 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்கள் குவித்த அவர் அவுட் ஆகி களத்தை விட்டு வெளியேறியதும், அவருக்கு பதிலாக மொயின் அலி களமிறங்காமல் ரவீந்திர ஜடேஜா அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ஆட்டத்தின் கடைசி கட்டத்தில் புவனேஸ்வர் குமார் வீச அதனை எதிர்கொண்ட ஜடேஜா சிங்கிள் எடுக்க முயற்சி செய்து பந்தை புவனேஸ்வர் குமார் இடமே அடித்தார். அப்போது ஜடேஜா கிரீசை விட்டு வெளியே வந்த போது புவனேஸ்வர் குமார் உடனடியாக ஸ்டம்பை நோக்கி பந்தினை எறிந்தார். அப்போது ஜடேஜா எதிர்பாராத விதமாக குறுக்கே வந்து பந்தினை உடம்பில் தடுத்து விட்டார்.

- Advertisement -

அதாவது ஸ்டம்பிங் செய்யப்படும்போது பேட்ஸ்மேன்கள் எந்தப் பக்கம் நிற்கிறார்களோ அதே திசையில் நகர வேண்டும் தவறி குறுக்கே நகர்ந்தால் அவுட் கொடுக்கப்படும். குறுக்கே நகர்ந்த ஜடேஜாவை கிளாசன் மூன்றாவது நடுவரிடம் அப்பீல் செய்ய, உடனடியாக அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் எதிர்பாராத விதமாக ஜடேஜா ஓடியதற்கு அப்பீல் செய்ய வேண்டாம் என்று அதனை திரும்ப வாபஸ் வாங்கினார். கம்மின்சின் இந்த செயலைக் கண்டு ரசிகர்கள் பாராட்டி வரும் வேளையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் கம்மின்சிடம் இதுகுறித்து இரண்டு கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது

இதையும் படிங்க:தோனி.. தோனி.. சிஎஸ்கே..சிஎஸ்கே.. அதிர்ந்த கல்லூரி மைதானம்.! திகைத்துப் போன சிவம் தூபே…

“ஜடேஜாவுக்கு எதிராக ரன் அவுட் அப்பீலை வாபஸ் வாங்கிய கம்மின்சிடம் இரண்டு கேள்விகளை கேட்கிறேன். ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து விளையாட வைத்து மகேந்திர சிங் தோனியை களம் இறக்காமல் வைத்திருப்பது உங்கள் திட்டமா? அடுத்ததாக வரவிருக்கும் டி20 உலக கோப்பையில் விராட் கோலி பேட்டிங் செய்யும்போது அவருக்கும் இதேபோன்று செய்வீர்களா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles