தோனி விளையாடிய அந்த ஒரு ஷாட்.. மனுஷன் வேற மாதிரி ஃபார்ம்ல இருக்காரு.. தோனி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர்

ஐபிஎல் உலகில் இன்றைய ஹாட் நியூஸ் மகேந்திர சிங் தோனி நேற்று இரவு விளையாடிய கேமியோ இன்னிங்ஸ்தான். அந்த அளவிற்கு மனிதர் பரபரப்பை ஏற்படுத்திச் சென்று விட்டார். இது குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் தோனி விளையாடிய அற்புதமான ஷாட் ஒன்று குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மைதானத்தில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்களுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. கடந்த இரு போட்டியிலும் சுமாராக விளையாடிய டேவிட் வார்னர் இந்த முறை ஆட்ட சூழ்நிலையை உணர்ந்து அற்புதமாக விளையாடினார்.

- Advertisement -

52 ரன்கள் குவித்த நிலையில்,டேவிட் வார்னர் பதிரானாவின் அற்புதமான கேட்சால் ஆட்டமிழந்து வெளியேறினார். அதற்குப் பிறகு வந்த அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் சற்று தொய்வாக விளையாடினாலும் இறுதிக் கட்டத்தில் தனது பழைய பார்மை மீட்டெடுத்தார். 32 பந்துகளில் 51 ரன்கள் குவித்த நிலையில், பதிரானாவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி அணி 20 ஓவர்களில் 191 ரன்கள் குவித்தது.

- Advertisement -

இந்த சவாலான ஸ்கோரை சென்னை அணி சேஸ் செய்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆரம்பமே அதிர்ச்சி அளிக்கும் விதமாக முக்கிய இரண்டு விக்கெடுகளை இழந்தது. இதற்குப் பின்னர் களம் இறங்கிய ரஹான இந்த போட்டியின் மூலம் பார்முக்கு வந்தார். சிறிது நேரம் விளையாடியவர் 45 ரன்களில் வெளியேறினார். அவருக்கு பக்கபலமாக டாரி மிச்சல் 34 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பின்னர் விசாகப்பட்டினம் மக்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி தான் களமிறங்கிய முதல் பந்திலே யே பவுன்டரி அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். இருப்பினும் வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்ற இவர் வெற்றி பெற வைக்க முடியவில்லை. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. எனவே தோனியின் இந்த அதிரடியான இன்னிங்ஸ் குறித்து கூறிய முன்னாள் சிஎஸ்கே வீரர் ஷேன் வாட்சன்

- Advertisement -

“நீங்கள் அனைவரும் விரும்புவது எம் எஸ் தோனி இந்த வகையான ஃபார்மில் இருப்பதைத்தான். பந்துவீச்சாளர்கள் அவரை வீழ்த்த துடிக்கும் பொழுது அவரது சக்தியும் திறமையும் வெளிப்படுத்துவாரே தவிர அவர் அழுத்தத்திற்கு உள்ளாகி நாங்கள் பார்த்ததில்லை. அவர் வாழ்க்கையில் பலமுறை இந்த தருணங்களை எதிர்கொண்டு இருக்கிறார்.

அவர் இன்றிரவு விளையாடிய சில ஷாட்கள், தோனி இதற்கு முன்னரே விளையாடி நான் பார்த்திருக்கிறேன். கவர்ஸ் திசையில் அவர் அடித்த அபாரமான சிக்சர் மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர் இன்னமும் அதை செய்து கொண்டிருக்கிறார்” என்று வாட்சன் கூறியிருக்கிறார். சென்னை அணி தோற்றாலும் மகேந்திர சிங் தோனியின் இந்த அதிரடி ஆட்டம் இன்னும் இரண்டு நாட்களுக்கு இதே பேச்சாகத்தான் இருக்கப் போகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles