டி20 உலகக் கோப்பைக்கு விராட் கோலி வேணாம்.?.. ரவி சாஸ்திரி பரபரப்பு.. கோபத்தில் ரசிகர்கள்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் 2ம் தேதி தொடங்க இருக்கிறது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய நாடுகளில் நடைபெறுவதால் அனைத்து அணிகளும் உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகின்றன.

- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் டி20 பிரீமியர் லீக் தொடர் நடைபெற்று வருவதால் இந்திய வீரர்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளைச் சேர்த்த தரமான வீரர்கள் இங்கு விளையாடி வருகின்றனர். இந்திய டி20 அணியை பொறுத்தவரை கடந்த உலக கோப்பைக்கு கேப்டனாக செயல்பட்ட ரோஹித் சர்மாவே இந்த முறையும் கேப்டனாக செயல்படுவார் என்று பிசிசிஐ செயலாளர் அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ஒரு சில வீரர்களை தவிர மற்ற வீரர்களை இந்த ஐபிஎல் தொடரில் அவர்களது செயல்பாட்டை பொருத்தே உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படக் கூடும் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. ஜெய்ஸ்வால், திலக் வர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த் ஆகியோர் இந்த ஐபிஎல் தொடரில் அவர்களை செயல்பாடுகளை பொறுத்தே உலகக் கோப்பைக்கு தேர்வு செய்யப்படக் கூடும்.

- Advertisement -

இதில் இந்திய அணியின் அனுபவ வீரரான விராத் கோலியை உலகக்கோப்பைக்கு தேர்வு செய்யப்பட வேண்டாம் என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் தெரிவித்ததாகவும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளி வருகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ஓய்வு பெற்று சற்று இடைவெளிக்கு பின்னர் பெங்களூர் அணியில் இணைந்திருக்கும் விராட் கோலி இந்த ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்து உலக கோப்பையில் இடம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல்லில் வர்ணனையாளர்களாக செயல்பட்டு கொண்டிருக்கும் ரவி சாஸ்திரி, கெவின் பீட்டர்சன், இயன் பிசப் ஆகியோர் மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது வர்ணனை செய்து கொண்டிருக்கும்போது அவர்களின் பார்வை டி20 உலக கோப்பை மீது திரும்பியது. அப்போது பேசிய ரவி சாஸ்திரி “டி20 உலக கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் அணி வீரர்களின் தேர்வு இந்த ஐபிஎல்லைப் பொருத்தே அமையக்கூடும். அதனால் தேர்வாளர்கள் முதல் போட்டியில் இருந்து அனைவரையும் கவனித்து வருகிறார்கள்” என்று கூறினார்.

- Advertisement -

அதற்கு பதில் அளித்த கெவின் பீட்டர்சன் “அமெரிக்கா போன்ற நாடுகளில் நீங்கள் கிரிக்கெட்டை வளர்க்க நினைத்தால் அங்கு விராட் கோலி போன்ற ஒருவர் கட்டாயம் இடம் பெற வேண்டும்” என்று கூற அதற்கும் பதில் அளித்த ரவி சாஸ்திரி “கிரிக்கெட்டை வளர்ப்பது முக்கியம்தான். ஆனால் அதைவிட முக்கியம் உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே. 2007 ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்ற போது அதில் சீனியர் வீரர்களே கிடையாது” என்று கூறினார்.

அதாவது டி20 உலக கோப்பைக்கு விராட் கோலி இடம் பெறக் கூடாது என்று சூசகமாக கூறியிருக்கிறார். விராட் கோலியின் நெருங்கிய பயிற்சியாளரே அவர் இடம் பெற வேண்டாம் என்று கூறி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles