இந்தியா – நியூசிலாந்து தொடரில் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையவில்லை என்றாலும், பந்துவீச்சாளர்களின் சிறப்பான செயல்பாடு அணிக்கு வெற்றியைத் தேடித்தந்ததாக ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். போட்டிக்குப் பிறகு பேசிய அவர், இந்தத் தொடரில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் வெவ்வேறு ஆடுகளச் சூழ்நிலைகளில் நடைபெற்றதாகவும், பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் சிறப்பானதாக அமையவில்லை என்றும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து இந்திய அணியின் பந்துவீச்சு அணுகுமுறை குறித்துப் பேசிய அவர், அனைத்து பந்துவீச்சாளர்களும் ஒரே திட்டத்துடன் செயல்பட்டதாகவும், தங்களுடைய திட்டங்களைச் சரியாகச் செயல்படுத்தியதால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க முடிந்ததாகவும் தெரிவித்தார். ஆடுகளத்தின் சூழ்நிலை எப்படியிருந்தாலும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்வதே தங்களுடைய நோக்கம் என்றும் கூறினார்.
மேலும், அணியில் அடிக்கடி வீரர்களை மாற்றுவது சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும், ரசிகர்கள் இரு அணிகளுக்கும் அளித்த ஆதரவு மகிழ்ச்சியளிப்பதாகவும் ஷ்ரேயாஸ் ஐயர் தெரிவித்துள்ளார். கிரிக்கெட் விளையாட்டு தற்போது வேறொரு நிலைக்கு வளர்ந்து வருவதாக கூறியிருக்கிறார்.

