இந்தியா யூஸ் பண்ண செம மாஸ்டர் பிளான்.. 209 ரன் கூட எடுக்க முடியாமல் படுதோல்வி அடைந்த நியூசி.. தொடரை வென்று அசத்தல்

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 209 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனதால், இந்த இலக்கை நியூசிலாந்து எளிதாக எட்டிவிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் திட்டமிட்டு செயல்பட்டு ஆட்டத்தின் போக்கையே மாற்றினர்.

- Advertisement -

இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது பந்துவீச்சில் கையாண்ட வியூகங்கள்தான். குறிப்பாக தொடக்கத்திலேயே முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சரியான லைன் மற்றும் லெந்த்தில் பந்துவீசி நியூசிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்தனர். வேகத்தை மாற்றிப் பந்துவீசுவது, ஹார்ட் லெந்த் பந்துகள் மூலம் தவறான ஷாட்களை விளையாட வைப்பது என இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாகத் திட்டமிட்டுச் செயல்பட்டனர். வில் யங் அடித்த பந்தை ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக கேட்ச் பிடித்ததும் இந்திய அணிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

தொடர்ந்து மிடில் ஓவர்களிலும் ரன்களைக் கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணி, நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக விளையாட விடவில்லை. குறிப்பாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் உள்ளிட்ட மற்ற பந்துவீச்சாளர்களும் முக்கியமான பங்களிப்பை வழங்கினர். இதனால் 209 ரன்கள் என்ற சிறிய இலக்கையும் வெற்றிகரமாகப் பாதுகாத்த இந்திய அணி, நியூசிலாந்தை 187 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடரையும் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles