புதிய பொறுப்பில் யுவராஜ் சிங்.. டெல்லி கேப்பிடல்ஸ் செஞ்ச தரமான சம்பவம்.. ஐபிஎல் 2027.. முழு விபரம்

இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஆல் ரவுண்டரான யுவராஜ் சிங், ஐபிஎல் 2027 தொடருக்கு முன்னதாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் உதவிப் பயிற்சியாளர் மற்றும் பேட்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் முதல் முறையாக அதிகாரப்பூர்வ பயிற்சியாளர் பொறுப்பை ஏற்கிறார் யுவராஜ் சிங்.

- Advertisement -

கடந்த காலங்களில் இந்திய அணியின் வெற்றிகளில் முக்கியப் பங்காற்றிய யுவராஜ் சிங், 2007 டி20 உலகக்கோப்பை மற்றும் 2011 ஒருநாள் உலகக்கோப்பையை வென்ற இந்திய அணிகளில் இடம்பெற்றிருந்தார். இளம் வீரர்களுக்கு வழிகாட்டியாகவும் செயல்பட்டு வரும் அவர், தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பேட்டிங் வலுப்பெற உதவுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

தனது புதிய பொறுப்பு குறித்து யுவராஜ் சிங் கூறுகையில், “டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் என் வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த அணியுடன் எனக்கு நீண்டகாலத் தொடர்பு உள்ளது. இந்த முறை தாதாவுடன் பயிற்சியாளர்களாக இணைந்து பணியாற்றவும் ஆவலாக இருக்கிறேன். பயிற்சி அளிப்பது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. திறமையான இந்த அணியுடன் பணியைத் தொடங்கக் காத்திருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles