ஐபிஎல் மட்டும் இல்லனா எங்களுக்கு இது நடக்க வாய்ப்பே இல்ல.. உண்மையை உரக்க சொன்ன நியூசி கிரிக்கெட் நிர்வாகி

IPL Has Played A Huge Role In New Zealand Cricket

- Advertisement -

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர் உலக கிரிக்கெட்டில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்திய வீரர்களுக்கு மட்டுமின்றி வெளிநாட்டு வீரர்களுக்கும் தங்களுடைய திறமையை மேம்படுத்தவும், உலகின் முன்னணி வீரர்களுடன் இணைந்து விளையாடவும் இந்தத் தொடர் வாய்ப்பளித்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக நியூசிலாந்து கிரிக்கெட்டின் வளர்ச்சியிலும் ஐபிஎல் முக்கியப் பங்கு வகித்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து வீரர்கள் மட்டுமின்றி, அந்நாட்டைச் சேர்ந்த பயிற்சியாளர்களும் சர்வதேச அளவில் அனுபவத்தைப் பெறுவதற்கு இந்தத் தொடர் உதவியிருக்கிறது.

- Advertisement -

இது குறித்து நியூசிலாந்து கிரிக்கெட் தலைமை நிர்வாகி ஜெஃப் அலாட் கூறுகையில், “ஐபிஎல் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்த தொடர். பிசிசிஐ சிறப்பாக நடத்தும் உலகின் முன்னணி தொடராக இது இருக்கிறது. நியூசிலாந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, எங்கள் வீரர்கள் மட்டுமின்றி பயிற்சியாளர்களும் வளர்ச்சியடைவதற்கும் தங்களுடைய திறமைகளை மேம்படுத்துவதற்கும் இது மிகப்பெரிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. உயர்தர கிரிக்கெட் சூழலில் செயல்படுவது, வெவ்வேறு பயிற்சி முறைகளை அறிந்துகொள்வது, உலகின் சிறந்த வீரர்களுடன் இணைந்து பணியாற்றுவது எனப் பல நன்மைகள் கிடைக்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles