புலிக்கு பிறந்தது பூனையாகுமா? தில்ஷானின் மகள் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ்… பாகிஸ்தானைத் தொடரிலிருந்தே தூக்கிய இலங்கை!

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் தில்ஷானின் மகள் லிமான்சா திலகரத்னே, U19 மகளிர் T20 முத்தரப்புத் தொடரில் தனது ஆல்-ரவுண்ட் ஆட்டத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர், பேட்டிங்கிலும் ஆட்டமிழக்காமல் ரன் சேர்த்து இலங்கை அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த வெற்றியால் பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறியுள்ளது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ஷஹர் பானோ ஆட்டமிழக்காமல் 24 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் பந்துவீசிய லிமான்சா, 2 ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதனால் பாகிஸ்தானால் பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

- Advertisement -

106 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இலங்கை அணிக்கு சஞ்சனா கவிந்தி அதிரடியாக விளையாடி உதவினார். அவர் 28 பந்துகளில் 46 ரன்கள் எடுத்தார். மறுபுறம் லிமான்சா ஆட்டமிழக்காமல் 16 ரன்கள் சேர்த்தார். இதனால் இலங்கை அணி 13.3 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய லிமான்சாவுக்கு ஆட்டநாயகி விருதும் கிடைத்தது.

- Advertisement -

தில்ஷான் இலங்கை கிரிக்கெட்டில் தனக்கெனத் தனி அடையாளத்தை உருவாக்கியவர். இப்போது அவரது மகளும் இளம் வயதிலேயே சர்வதேச அளவிலான இளையோர் கிரிக்கெட்டில் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பாகிஸ்தானுக்கு எதிரான இந்தப் போட்டியில் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அவர் பங்களித்தது இலங்கை அணிக்கு முக்கியமானதாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. பாகிஸ்தானின் தொடர்ப்பயணம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், அக்டோபர் 16-ம் தேதி ஃபைசலாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இலங்கை அணி தனது திறமையை மீண்டும் நிரூபிக்கத் தயாராகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles