ஷ்ரேயஸ் ஐயர் சதத்துக்கு பிறகு சொன்ன ஒரு வார்த்தை… இத்தனை நாள் காத்திருந்ததற்கு இதுதான் காரணமா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அதிரடியாக விளையாடி தனது முதல் சர்வதேச டி20 சதத்தை பதிவு செய்தார். 43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 102 ரன்கள் குவித்த அவர், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இந்தப் போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுவிட்டு ஜப்பானில் இருந்து திரும்பியிருந்தது. நீண்ட பயணம் மற்றும் களைப்பு இருந்தபோதிலும், அதனை காரணமாகக் கூறாமல் இந்திய வீரர்கள் விளையாடியதாக ஷ்ரேயஸ் ஐயர் தெரிவித்துள்ளார். மேலும், அறிமுக வீரர் நமன் தர் முக்கியமான நேரத்தில் பந்துவீச முன்வந்ததையும் அவர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

இது குறித்து ஷ்ரேயஸ் ஐயர் கூறும்போது, “நீண்ட நேரப் பயணத்திற்குப் பிறகு நான் எங்கே இருக்கிறேன் என்பதே எனக்குத் தெரியவில்லை. தினமும் இப்படித்தான் எழுந்திருக்க வேண்டும் போல இருக்கிறது. முதலில் பந்துவீசியது எங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது. பயணக் களைப்பை ஒரு காரணமாக நாங்கள் பார்க்கவில்லை. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடிய விதத்தையும் அதில் இருந்த உற்சாகத்தையும் பார்த்தோம். எங்களுடைய செயல்முறையில் கவனம் செலுத்துவது முக்கியமாக இருந்தது. எனது முதல் சதத்தை அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது நடந்துவிட்டது. கனவுகள் நிச்சயம் நனவாகும். வெற்றி என்பது வேறு மாதிரியான உணர்வைத் தருகிறது. உங்களுடைய நாளாக இருந்தால், அணிக்காக போட்டியை வெல்ல வேண்டும். ஒட்டுமொத்தமாக இது ஒரு சிறப்பான செயல்பாடு. இதே மனநிலையுடன் தொடர்ந்து விளையாடினால், டி20 கிரிக்கெட்டில் மிகவும் ஆபத்தான அணிகளில் ஒன்றாக இருப்போம். நமன் தர் முக்கியமான நேரங்களில் பந்துவீச விரும்பினார். ஆடுகளத்தில் இருந்த திருப்பத்தை பயன்படுத்திக் கொண்டார். அவருடைய அணுகுமுறை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles