சமையல்காரங்க அதிகம் ஆனா உணவு கெடும்.. சிஎஸ்கே நிலைமையும் இப்போ அப்புடிதான் – முன்னாள் இந்திய வீரர் பேட்டி

சிஎஸ்கே அணியில் தற்போது கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான விஷயமாக பவுலிங் துறை இருப்பதாக முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். குறிப்பாக ஜாகீர் கான் தலைமை பயிற்சியாளராக வந்திருப்பது அணியின் இந்த பலவீனத்தை சரி செய்ய உதவக்கூடும் என அவர் கருதுகிறார். இதனால் அடுத்த சீசனில் சிஎஸ்கே அணியில் சில மாற்றங்கள் வருவதற்கான வாய்ப்பும் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

அதேபோல், அணியில் பெரிய அளவில் சப்போர்ட் ஸ்டாஃப்களை வைத்திருப்பதைவிட தேவையான சிலருடன் மட்டும் செயல்படுவது நல்லது என்றும் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். சிறிய மாற்றங்களுடன் அதிர்ஷ்டமும் கைகொடுத்தால் சிஎஸ்கே அணியால் மீண்டும் டாப் 4 இடங்களுக்குள் செல்ல முடியும் என்பதும் அவரது கருத்தாக உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது, “சிஎஸ்கே அணிக்கு மைக் ஹஸ்ஸி, ஜாகீர் கான் மற்றும் ஸ்ரீதரன் ஸ்ரீராம் ஆகிய மூன்று பேரே போதுமானது. மற்ற சப்போர்ட் ஸ்டாஃப் அனைவருக்கும் பை பை சொல்லிவிடலாம். இவர்களுடன் தோனியும் இருப்பதால் இதற்கு மேல் வேறு யாரும் தேவையில்லை. அதிக சமையல்காரர்கள் சேர்ந்தால் உணவு பாழாகிவிடும். பவுலிங் அணியின் மிகப்பெரிய பலவீனமாக இருக்கிறது; ஜாகீர் அதை சரிசெய்ய முடியும். சிறிய மாற்றங்களும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் இருந்தால் டாப் 4 வரை செல்ல முடியும்” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles