கழுதை வேலையை பிரசித் கிருஷ்ணா செஞ்சாரு.. ஆனா அத்தனையும் சமாளிச்சு ஸ்டாரா நிக்கிறாரு .. இந்திய பவுலிங் கோச்

இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா தற்போது சிறந்த பந்துவீச்சாளராக உருவெடுத்து வருகிறார். ஆனால் இதற்கு முன்பு தொடர்ந்து சில போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்ததால் மீடியா மற்றும் கமெண்டேட்டர்களின் விமர்சனங்களை எதிர்கொண்டார். ஆனால், அணியின் திட்டப்படி விக்கெட்டுகள் கிடைக்காத நேரங்களில் கூடுதல் வேகம் மற்றும் பவுன்ஸை பயன்படுத்தி தாக்குதல் பந்துவீச்சில் ஈடுபட வேண்டும் என்பதே அவருக்கு வழங்கப்பட்ட முக்கிய பொறுப்பாக இருந்தது.

- Advertisement -

இதுகுறித்து இந்திய பௌலிங் கோச் மோர்னே மோர்கெல் பேசுகையில், “பிரசித் கிருஷ்ணாவின் மன உறுதி பாராட்டுக்குரியது. வெளியிலிருந்து கடுமையான விமர்சனங்கள் வந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் மீண்டும் களத்திற்கு வந்து தனது திறமையை நிரூபித்துள்ளார். ஒரு வீரர் கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை சமாளிக்க வேண்டிய நிலையில், வெளிப்புற விமர்சனங்களை புறக்கணிப்பது மிகவும் முக்கியம்.

- Advertisement -

சில நேரங்களில் அணிக்காக கடினமான பணிகளை செய்ய வேண்டிய பொறுப்பு அவருக்கு வழங்கப்படுகிறது. அது எப்படி என்றால் கழுதை செய்யும் வேலையை செய்யுமாறு கேட்கிறது. பிட்சில் பௌலர்களுக்கு சாதகமான சூழல் இல்லாதபோது வேகம் மற்றும் பவுன்ஸை வைத்து விக்கெட்டுகளை தேடுவது ஆபத்தான முயற்சி. அதனால் ரன்கள் சென்றாலும் அணியின் முழு ஆதரவும் அவருக்கு இருக்கிறது. நாங்கள் அவருக்கு தேவையான தெளிவையும் நம்பிக்கையையும் தொடர்ந்து வழங்கி வருகிறோம். தற்போது அவர் உலகத்தரம் வாய்ந்த பௌலராக வளர்ந்து வருகிறார்” என்றார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles