நேற்று லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பாக விளையாடிய கேள்வி கேட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்கள். இந்த போட்டியில் ராஜஸ்தான் கேப்டனாக செயல்பட்ட ஜெய்ஸ்வால் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் 23 பந்தில் 43 ரன்கள் எடுக்க, வைபவ் சூரிய வம்சி 38 பந்தில் 93 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஜோடி உலக அளவில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இது குறித்து ஜெய்ஸ்வால் பேசும்போது “நாங்கள் 220 ரன் துரத்த வேண்டும் என்று தெரிந்ததுமே நாங்கள் திட்டங்களை எளிமையாக வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். எங்கள் ஷாட்டுகளை உள்ளே சென்று விளையாட வேண்டும் என்பது தான் திட்டம். இருவரில் ஒருவர் கடைசி வரை விளையாட வேண்டும் என்பதுதான் பேச்சு. நான் சொன்னதை வைபவ் செய்துவிட்டார்”
“அடுத்த போட்டி இல்லை அமைதியாக இருப்பதைப் பற்றி சொன்னால் இந்த விளையாட்டை அனுபவித்து விளையாட வேண்டும். எப்பொழுதும் சிரிப்புடன் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். மற்றபடி எதுவும் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

