அட போங்கப்பா.. M இந்த டீம வச்சிட்டு இதை பண்ணதே பெருசு.. கப் அடுத்த வருஷம் வாங்கி தரேன் – ருதுராஜ் கருத்து

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆப் வாய்ப்பை இழந்தது. இந்த தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றிருந்தால் அடுத்த போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்க முடியும். ஆனால் சொந்த மைதானத்தில் கிடைத்த முக்கிய வாய்ப்பை சிஎஸ்கே தவற விட்டுவிட்டது.

- Advertisement -

இதுகுறித்து ருதுராஜ் பேசும்போது “இந்த போட்டி மிகவும் நெருக்கமானதாக அமைந்திருந்தது. கடைசி இரண்டு ஓவர்கள் வரையில் நாங்கள் போட்டியில் இருந்தோம். இறுதியில் வெற்றிக்கான வாய்ப்பை தவற விட்டு விட்டோம். அதே சமயத்தில் எங்கள் வீரர்கள் போராடிய விதத்தில் நான் பெருமைப்படுகிறேன்”

- Advertisement -

“பல வீரர்கள் காயத்திற்கு நடுவே எங்களுக்கு கிடைத்த வீரர்களை வைத்து நாங்கள் இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருப்பது சிறப்பான விஷயம். எல்லா வீரர்களும் வரும்பொழுது நாங்கள் இன்னும் வலிமையான அணியாக மாறி அடுத்த வருடம் சிறப்பாக இருப்போம்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles