26 கோடியை பார்க்காதீங்க கோயங்கா.. ரிஷப் பண்ட்டை மட்டுமே அதுக்கு பாருங்க.. இல்லனா உங்க டீம் காலி – ஷேவாக் கருத்து

அடுத்த ஆண்டு 2027 ஐபிஎல் தொடருக்கு லக்னோ அணி நிர்வாகம் தொடர்ந்து ரிஷப் பண்ட்டை தக்கவைக்க வேண்டும் என வீரேந்தர் சேவாக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

- Advertisement -

தற்போது லக்னோ அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வரும் ரிஷப் பண்ட் ஐபிஎல் மெகா ஏலத்தில் மிக அதிகபட்ச தொகையான 26 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். ஆனால் அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்சி மிகவும் மோசமாக இருந்து வருகிறது.

- Advertisement -

இதன் காரணமாக அடுத்த ஆண்டு அவரை அணியில் இருந்து நீக்க யோசிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. 26 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பதால் இந்த பணத்தில் வேறு சில வீரர்களை வாங்க ஆலோசிக்கப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து பேசி உள்ள வீரேந்தர் சேவாக் கூறும்போது “ரிஷப் பண்ட்டை மெகா ஏலத்தில் விட்டு குறைந்த பணத்திற்கு வாங்கலாம் என்று தோன்றும் அது நியாயமான முடிவாகவும் தெரியும். அப்படி குறைந்த தொகைக்கு மீண்டும் வாங்கி வந்தால் அது அந்த வீரர் மனதை பாதித்துவிடும். அது அடுத்த சீசனிலும் அவர் மோசமாக செயல்பட வழி வகுக்கும். இது லக்னோ அணியை இன்னொரு சீசனிலும் மோசமான இடத்திற்கு கொண்டு சென்று விடும். எனவே அவரை தக்க வைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles