ஸ்ரேயாஸ் என்கிட்ட சாகல் பாயை மாட்ட விட்டுட்டார்.. அதுக்காகவே காத்திருந்து பொளந்து விட்டேன் – திலக் வர்மா பேட்டி

நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்தில் 75 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்து மும்பை வீரர் திலக் வருமா ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் அவர் இந்த போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் மிகவும் பொறுப்புடன் விளையாடிய திலக் வருமா ஆட்டத்தை இறுதிவரை எடுத்துச் சென்று மும்பைக்கு வெற்றிகரமாக முடித்து கொடுத்தார். அவரது பேட்டிங் மிகவும் திட்டமிடப்பட்டதாக இருந்தது.

- Advertisement -

இதுகுறித்து திலக் வர்மா பேசும் பொழுது “நான் எப்பொழுதுமே சொல்வது தான் எனக்கு ஆட்டத்தை முடித்து வைக்கவே பிடித்திருக்கிறது. நான் அதையே விரும்புகிறேன். இரண்டாவது டைம் அவுட்டுக்குப் பிறகு வரும் ஓவரில் இருந்து அதிரடியாக ஆரம்பிப்பேன் என்று பயிற்சியாளரிடம் சொன்னேன். இறுதியாக சாகல் பாய் வந்து என்னிடம் துரதிஷ்டவசமாக சிக்கிக்கொண்டார்”

- Advertisement -

“நான் இந்த போட்டியை முடிந்த வரையில் ஆழமாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டேன். இறுதியில் வில் ஜேக்ஸ் வந்து அற்புதமான ஒத்துழைப்பை கொடுத்தார். அவருடைய பங்களிப்பும் வெற்றிக்கு மிக முக்கியமானதாக இருந்தது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles