இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா எதற்கெடுத்தாலும் பயப்படுகிறார் என ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் பேட்ஸ்மேனாக பவுலராக கேப்டனாக ஹர்திக் பாண்டியா மிகவும் மோசமாக இருந்தார்.
இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “ஹர்திக் பாண்டியா முடிவுகள் எடுப்பதற்கு மிகவும் பயப்படுகிறார். பவர் பிளேவில் பந்து வீச பயப்பட்டு இளம் வீரர் பகத்திடம் கொடுக்கிறார். அவர் பந்து வீசினால் எல்லோரும் அடித்து நொறுக்கி விடுகிறார்கள்”
“அடுத்து இனிமேல் எல்லா அணிகளுமே அவருக்கு உடலை நோக்கி பந்து வீசும். அவர் அசையாமல் அப்படியே நிற்கப் போகிறார். மேலும் அவர் பயப்படுவதால் விளையாடுவது வீண்” என்று கூறியிருக்கிறார்.

