ஹர்பஜன் சிங் மனுசனே கிடையாது.. எனக்கே மெசேஜ் பண்ணி அதை பண்ண சொல்றாரு.. பிளாக் பண்ணிட்டேன் – ஸ்ரீசாந்த் அதிரடி

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் நடு மைதானத்தில் வைத்து ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த் கன்னத்தில் அறைந்தது மிகப்பெரிய பரபரப்பான சம்பவமாக இருந்தது. பிறகு இருவருமே அதை சுமுகமாக முடித்துக் கொண்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் கூட ஹர்பஜன் சிங் தான் அப்படி ஒரு காரியத்தை செய்திருக்கவே கூடாது எனவும், தான் தன்னுடைய பிள்ளைகளின் முன்னால் தவறான முன்னுதாரணமாக இருக்க விரும்பவில்லை என்றும் பேசி இருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் ஹர்பஜன் சிங் இந்த விவகாரத்தை அடிப்படையாக வைத்த ஒரு விளம்பரத்தில் நடித்திருக்கிறார். மேலும் அதற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளமும் வாங்கி இருக்கிறார். தற்பொழுது இது மீண்டும் பிரச்சினையாக மாறி உள்ளது.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீசாந்த் பேசும்போது “ஹர்பஜன் இந்த பிரச்சனையை அடிப்படையாக வைத்த விளம்பரத்தில் நடித்து ஒரு கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருக்கிறார். இதற்கு எனக்கே மெசேஜ் செய்து இந்த விளம்பரத்தை ஸ்டோரியாக வைக்க கேட்கிறார். நான் மன்னிப்பேன் ஆனால் மறக்க மாட்டேன் என்று கூறிவிட்டேன். மேலும் இன்ஸ்டாகிராமிலும் அவரை நான் பிளாக் செய்து விட்டேன்” என்று சொல்லி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles