ரிக்கி பாண்டிங் என்ன ஒரு மனுஷன்.. ஒரே ஒரு பந்துல ஆர்யாவை கண்டுபிடிச்சிட்டாரு.. ஆனா நீங்க என்ன செய்றீங்க? – அஸ்வின் பேச்சு

இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் மெகா ஏலத்தில் சரியாக செயல்பட முடியாமல் போனால், மினி ஏலத்தை வைத்து சரி செய்ய முடியும், அதற்கு உலகெங்கும் வீரர்களை தேடி அவர்களின் திறமையை கண்டறிய வேண்டும் என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே கேப்டன் மற்றும் பயிற்சியாளர் இருவருமே மெகா ஏலத்தில் சரியாக செயல்பட முடியாமல் போனதால், தங்களால் ஒரு சிறந்த அணியை உருவாக்க முடியவில்லை என்று கூறி வருகிறார்கள். இதற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் மறைமுகமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும் போது “பிரியன்ஸ் ஆர்யா முதன் முதலில் ஏலத்திற்கு வருவதற்கு முன்பாக நான் அவர் குறித்து பேசி இருக்கிறேன். அந்த ஏலத்தில் அவரை யாரும் வாங்கவில்லை. நான் அவரைப் பற்றி சில அணிகளில் இருந்த வீரர்களிடம் கூறினேன். ஆனால் தங்கள் அணியில் தொடக்க இடத்திற்கு வீரர்கள் இருப்பதால் வாங்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள்”

- Advertisement -

“ரிக்கி பாண்டிங் பயிற்சி முகாமில் பிரியன்ஸ் ஆர்யா விளையாடிய ஒரே ஒரு பந்தை பார்த்து பெரிய ஆளாக வருவான் என்று உடனே தேர்வு செய்துவிட்டார். அப்படிப்பட்ட ஒரு மனிதர் கண்ணில் விழுந்த காரணத்தினால் அந்தப் பையன் வாழ்க்கை மாறிவிட்டது. ரிக்கி பாண்டிங் மினி ஏலத்தில்தான் கூப்பர் கானலியை கொண்டு வந்தார். மெகா ஏலம் சரியாக போக விட்டாலும் கூட நம்மால் மினி ஏலத்தில் குறைகளை சரி செய்ய முடியும். அதற்கு நாம் வீரர்களை தேட வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles